பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

மணவையாரின சமய நலலிணககய பணிகள


மானாரின் பிற சமயக் கண்ணோட்டம்' போன்ற நூல்கள் வழியாக அப்பணியை மணவையார் திறம்பட ஆற்றியுள்ளாா்.

நபிகள் நாயகம் வழியாக இறைவன் தங்களுக்கு வழங்கிய மார்க்கமே சிறந்த மார்க்கம் என ஏற்றொழுகும் இஸ்லாமியர் பிற சமயங்களைப் பழித்தொதுக்குவதில்லை என்பதைத் தக்க சான்றுகளுடன் மணவையார் விளக்கியுள்ளார். உங்களுக்கு 'உங்கள் மார்க்கம், அவர்களுக்கு அவர்கள் சமயம்' என்னும் திருக்குர்ஆன் திருமறை வாசகத்தை விளக்கும் மணவையார், எந்தவொரு சமயத்தைச் சார்ந்தவர்களும் அவரவர் சமயங்களைப் பேணி ஒழுக வேண்டுமே தவிர, ஒரு சமயத்தைச் சார்ந்தவர் சமய வழியில் குறுக்கிடுவதை இஸ்லாம் அறவே வெறுக்கிறது. அவரவர் நம்பிக்கைக்கேற்ப அவரவர் சமய நெறிப்படி வாழ, சடங்கு சம்பிரதாயங்களைப் பேணி ஒழுகப் பணிக்கிறது எனத் தெளிவாக்குகிறார். "(நம்பிக்கையாளர்களே:) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (ஆண்டவன் என) அழைக்கிறார்களோ அவற்றை நீங்கள் பழிக்காதீர்கள்" எனத் திருக்குர்ஆன் (6:108) கூறுவதை அவர் கட்டிக்காட்டுகின்றார். அவ்வாறே இஸ்லாத்தில் இணையுமாறு பிறரை வற்புறுத்தவோ கட்டாயப்படுத்தவோ இஸ்லாத்தில் அறவே இடமில்லை என்பதோடு, இத்தகைய செயலை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது என்பதையும் திருமறையின் துணை கொண்டே அவர் நிறுவுகின்றார்.

பள்ளிவாசலில் கிறிஸ்தவப் பிரார்த்தனை நடைபெறுவதற்கு நபிகள் நாயகமே ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியை மணவையார் பெருமிதத்தோடு கூறுகிறார்.

மதீனாவில் நபிகள் நாயகத்தை நேரில் கண்டு பலவற்றைப்பற்றி விவாதிக்கப் பல்வேறு சமயத் தூதுக் குழுக்கள்