பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமுதனஅடிகள்

113


வந்தன. அவற்றுள் நஜ்ரான் என்னுமிடத்திலிருந்து வந்திருந்த 70 கிறிஸ்தவத் துறவியர் அடங்கிய குழுவும் ஒன்றாகும். நாயகம் இருந்த பள்ளி வாசலில் அவருடன் நீண்ட நேரம் உரையாடிய கிறிஸ்துவத் துறவியர் வெளியே சென்று பிரார்த்தனை செய்து விட்டு திரும்பிவர விரும்பினர். இதையறிந்த நாயகம் 'இரண்டு கடவுள்கள் இல்லை, இறைவன் ஒருவனே, அவனை எங்கிருந்தும் வணங்கலாம். நீங்கள் விரும்பினால் இப்பள்ளி வாசல் வளாகத்தின் ஒரு பகுதியிலேயே உங்கள் கிறிஸ்துவ சமய சடங்குமுறைகளோடு பிரார்த்தனை புரிந்து இறைவணக்கம் புரியலாம்' என்று கூறினார். கிறிஸ்தவத் துறவியரும் பள்ளிவாசல் வளாகத்தின் ஒரு பகுதியில் குழுமி, தங்கள் கிறிஸ்தவ சமயச் சம்பிரதாயச் சடங்கு முறைகளோடு தங்கள் பிரார்த்தனையை நிறை வேற்றி மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சியைச் சுட்டுவதன் மூலம் இஸ்லாத்தின் பிற சமயக் கண்ணோட்டம் எத்தகையது என்பதை மணவையார் எடுத்தோதுகின்றார்.

மக்காவிலிருந்து நபிகள் நாயகம் மதீனா வந்தபோது அங்குப் பல இன, சமய மக்களும் வாழ்ந்து வந்தனர். அவர்களிடையே நிலவிய ஒற்றுமையின்மையைப் போக்குதற்காக எல்லாச் சமயச் குரவர்களையும் இனத் தலைவர்களையும் நபிகள் நாயகம் ஒன்று கூட்டி அவர்களிடையே ஒற்றுமையை உருவாக்க உதவினார். மதீனாவில் நகர அரசு ஒன்றினை உருவாக்கி, அதற்குரிய சட்டத் தொகுப்பினையும் அவர் வகுத்துத் தந்தார், 'முஸ்லிம்களும் யூதர்களும் கிறிஸ்த வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களைப் போன்று ஒருங்கிணைந்து வாழ வேண்டுமென வலியுறுத்தும் அச்சட்டத் தொகுப்பு அனைவருக்கும் அவரவர் சம யத்தைச் சார்ந்தொழுக முழு உரிமை உண்டாதலால் ஒரு

8