இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அமுதன அடிகள்
117
வம் மன்னர்களின் கொடுங்கோன்மையே அன்றி, அவர்கள் சார்ந்திருந்த சமயங்களின் கொடுங்கோன்மை அன்று என்பதை மணவையார் தெளிவுறத்துவார்.
- 'இஸ்லாத்தின் பெயரைக் கூறி மன்னர்கள் போர்களை நடத்தியுள்ளனர். அதே போல மற்ற மதங்களைச் சார்ந்த மன்னர்களும் தத்தம் மதங்களின் பெயரால் போர்களை நிகழ்த்தியுள்ளனர். இத்தகைய போர்களுக்கும் மதங்களுக்கும் சம்பந்தமில்லை. மன்ன வர்கள் தங்களில் ஆதிக்கப் போக்கிற்கு மதங்களைப் பகடையாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பதே உண்மை.'
என 'டைம்ஸ் ஆஃப் இண்டியா' இதழில் பி.என்.பாண்டே என்பார் எழுதியதைத் தம் கருத்துக்கு அரணாகக் காட்டுகிறார் மணவையார்,
ஜிஹாது பற்றிய ஒரு தவறான கருத்து சமுதாயத்தில் நிலவுவதை மணவையார் எடுத்துக்காட்டி திருத்துகின்றார்.
- 'எங்காவது முஸ்லிம் மன்னர்கள் ஒரு நாட்டை ஆக்கிரமிக்கவோ அல்லது ஆளும் பகுதியை விஸ்தரிக் கவோ படையெடுப்பு நிகழ்த்தினால் அதை 'இஸ் லாமிய ஜிஹாது எனக் குறிப்பிடுவது மிக மோசமான மோசடியாகும். முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் இஸ்லாம் பற்றிய பல தவறான கருத்துகள் பரப்பப் பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று 'ஜிஹாது' என்பதாகும். முஸ்லிம் அல்லாதவர்களிடையே மட்டுமல்ல முஸ்லிம்களிடையிலும் இஸ்லாமிய நெறியின் அடிப் படை உண்மைகளை உணர்ந்து தெளியாநிலை இருந்து வருவதை மறுப்பதற்கில்லை. சுருங்கச் சொன்னால் இஸ்லாத்தைப்பற்றிய மிகத் தவறான