பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

மணவையாரின் சமய நல்லிணக்கப் பனிகள்




பிரச்சாரத்துக்கு ஜிஹாது' என்ற சொல் பயன்படுத்தப் பட்டு வருகிறது. எங்காவது முஸ்லிம்களிடையே தீவிரத் தன்மை தலைதூக்கினால் அதை ஜிஹாது” என்ற சொல்லால் குறிப்பிடுவது இன்று வழக்கமாகி விட்டது. தீவிர வாதத்துக்கும் சாந்தி சமாதான மார்க்கமாகிய இஸ்லாத்துக்கும் தொடர்பே இல்லை என்பது மிகத் தெளிவான உண்மை."

ஒரு முஸ்லிம் மேற்கொள்ளும் ஜிஹதுவினுடைய நோக்கம் எத்தகையதாக இருக்கவேண்டும் என்பதை வ ஜாஹிது ஃபீஸ்பீலிஹி" என்ற சொற்றொடர் மிகத் தெளி வாகக் கூறுகிறது. இதற்கு அல்லாஹ்வின் வழியில் ஜிஹாதுசெய்யுங்கள் என்பது பொருளாகும்.

திருக்குர்ஆன் அடிப்படையில் ஜிஹாது இருவகைப் பட்டதாக அமைந்துள்ளது. ஒன்று ஜிஹாதுல் அஸ்கர் மற்றொன்று ஜிஹாதுல் அக்பர்.

ஒரு முஸ்லிம் தனக்கோ அல்லது தன்னைச் சார்ந்தவர் களுக்கோ ஆபத்து வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து என்று வரும் போது அதை உடனடியாக எதிர்த்துப் போராடுவது அவன் செய்யும் 'ஜிஹாதுல் அஸ்கர். தன்னைப் பாதுகாத்துக் கொள்வது வன்முறையும் அல்ல, தீவிரவாதமும் அல்ல; சுருக்கமாக இதை வெளிப்பகையை அல்லது பகைவர்களை எதிர்த்துப் போராடுதல் எனக் கூறலாம்.

மற்றொன்று ஜிஹாதுல் அக்பர் ஆகும். இதற்கு 'மாபெரும் போராட்டம்' என்பது பொருளாகும்.

'ஒவ்வொரு மனிதனிடத்திலும் கண், காது, மூக்கு, வாய், மெய்(உடம்பு) என்னும் ஐம்பொறிகள் உண்டு. இவற்றோடு தொடர்புடையவை ஐம்புலன்கள் ஆகும். இதை ஹிந்துமதத் தத்துவத்தில் ஐந்திரியங்கள் எனக் கூறுவர்.