பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

மணவையாரின் சமய நல்லிணக்கப பணிகள்


களைச் சார்ந்தவர்களிடம் ‘முஸ்லிம் அல்லாதவர்’ என்னும் ஒரே காரணத்துக்காக 'ஜிஸ்யா' வரி வசூலிக்கப்பட்டதாக நாம் வரலாற்று நூல்களில் படிக்கின்றோம். இக்கருத்து பாட நூல்களிலும் இடம் பெற்றிருப்பதை நாம் அறிவோம்.

இதுவும் தவறான கருத்து என மணவையார் விளக்குகின்றார்.

'ஜிஸ்யா' என்பது முஸ்லிமல்லாதவர்களிடமிருந்து கட்டாயமாக வசூலிக்கும் தண்டத்தீர்வையோ அல்லது அபராதத் தொகையோ அன்று, பின் என் இந்தத் தனி வரி?

இஸ்லாமிய ஆட்சியில் முஸ்லிம் அல்லாதவர்களால் கொடுக்கப்பட்டு வந்த சிறு வரியே இது. இஸ்லாமிய ஆட்சியில் முஸ்லிம் அல்லாத பிற சமயக் குடிமக்கள் போர்ப்படைகளில் சேருவதினின்றும் விலக்குப் பெறும் பொருட்டும், சமுதாய வாழ்வில் தம் உயிர் உடைமைகளுக்கு முழுப் பாதுகாப்பும் பெறும் பொருட்டும் அரசுக்கு இச் சிறு வரியைச் செலுத்தி வந்தனர். சுருங்கச் சொன்னால் முஸ்லிம் அல்லாதவர்களின் ஒட்டுமொத்தச் சமுதாய நலனுக்கும் பாதுகாப்புக்குமென வசூலிக்கப்பட்ட தொகையே, 'ஜிஸ்யா'.

ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரிய ஐம்பெரும் கடமைகளுள் ஜக்காத் என்னும் ஏழை வரியைச் செலுத்த வேண்டுவதும் ஒன்றாகும். பிற சமயத்தவர்களாகிய குடிமக்களிடமிருந்து ஜக்காத் வசூலிக்க முடியாதாகையால், அதற்குப் பகரமாக ஜக்கர்த் அளவுக்கு இரண்டரை விழுக்காடு இல்லாவிடினும், ஒரு சிறு தொகையைத் தான வரியாக முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்து அரசு வசூலித்தது. ஜக்காத் தொகையை விட ஜிஸ்யா தொகை மிகச் சிறியதாகும். ஜக்காத், ஜிஸ்யா ஆகிய இருதொகைக்கும் சமுதாய நலப்