பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமுதன் அடிகள்

121


பணிகளுக்காக மட்டுமே செலவிடப்பட்டன என மணவையார் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.

அதுமட்டுமன்று; பெண்கள், வயது முதிர்ந்தோர், சிறுவர்கள், துறவிகள், பார்ப்பனர்கள், பாதிரிகள், தம் சமயப் பணியில் ஈடுபட்டிருப்போர், பார்வையிழந்தோர், உடல் ஊனமுற்றோர், தீராப் பிணிகளால் பீடிக்கப்பட்டோர் ஆகியோரிடமிருந்து 'ஜிஸ்யா' வரி வசூலிக்கக் கூடாது என்பது விதியாகும் என்பதையும் அவர் விளக்குகின்றார்.

'யார்' எனப் பாராமல் 'என்ன' என்பதில்
கருத்தூன்றும் மணவையார் மாண்பு

பொதுவாழ்வில் எழுத்து மூலமாகவும் பேச்சுமூலமாகவும் பதிப்புப்பணி மூலமாகவும் சமய நல்லிணக்கப் பணியில் ஈடுபட்டுள்ள மணவையாரின் தனி வாழ்விலும் சமயக் காழ்ப்பினைக் காண இயலாது. இஸ்லாமிய நூல்களைப் போலவே பிற சமய இலக்கியங்களையும் அவர் கற்றுத் தேர்ந்தவர். எச்சமயம் சார்ந்த இலக்கியம் என்பதைப் பொருட்படுத்தாமல் சிறந்த இலக்கியங்களைத் தேடிப் பிடித்துக் கற்பது அவரது பண்பாடு. அவ்வாறே சிறந்த இலக்கியச் சொற்பொழிகளுக்குத் தவறாமல் செல்வதும் அவரது இயல்பு, அவரது சிறந்த இலக்கிய அறிவே பல்லாயிரக் கணக்கான கலைச்சொற்களைக் காண அவருக்கு உதவி வருகிறது என்பதில் ஐயமில்லை.

தடுத்தாட்கொண்ட மூவர்

தமது வாழ்க்கையில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர்களென அவர் மூவரைக் கருதிப் போற்றுகின்றார். அரசியலில் நுழையாமல் மணவையாரைத் தடுத்தாட்கொண்டு தமிழ் வளர்ச்சிப் பணியில் ஈடுபடுத்திய பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அம்மூவருள் தலையா