பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

மணவையாரின் சமய நல்லிணக்கப் பணிகள்


யவர், தம் வாழ்நாள் முழுமையும் அரிதின் தேர்ந்து கற்றுத் தெளிந்த கருத்துகளை மணவையாருடன் பகிர்ந்துகொண்டு அவரது அறிவுப் பசிக்கு விருந்து படைத்து அறிவியல் கண்ணோட்டத்துடன் தமிழ்ப்பணியாற்ற மணவையாருக்கு வழிகாட்டிய பெருமை தெ.பொ.மீ. அவர்களையே சாரும்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை நிறுவி உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற வழிவகுத்தவரும் உலக அரங்கில் தமிழுக்குச் சிறப்பிடம் பெற்றுத் தந்தவருமாகிய தவத்திரு. சேவியர் தனிநாயக அடிகளார் மணவையாரின் உணர்வுகளும் சிந்தனைகளும் குறுகிய வட்டத்துக்குள் அடங்கிவிடாமல் உலகளாகிய முறையில் சிறகடித்துப் பறக்கத் தூண்டி வழிகாட்டினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவப் பருவத்தில் அடிகளாருடன் பழகும் வாய்ப்பினைப் பெற்ற மணவையார் அடிகளாருடன் கலந்துறவாடும் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு புதுச் சிந்தனையை புதுக் கருத்தை எதிர்காலத் தமிழ் வளர்ச்சிக்கான வழிமுறைகளை ஆக்கபூர்வமாகவும் நடைமுறைச் சிந்தனைக்கேற்பவும் அவர் வெளிப்படுத்தி வந்தார். அவரோடு உரையாடுவதே புத்துணர்வூட்டும் புது அதுபவமாக இருந்தது' என நினைவு கூர்கின்றார்., 'காலப் போக்கில் வழக்குக் குறைவால் பொருள்மாற்றம் கண்டுவிட்ட சங்கச் சொற்களை மீண்டும் புதுப்பித்துப் பயன்படுத்த வேண்டும். இதனால் இறப்பை நாடிச் சென்றுவிட்ட பல தமிழ்ச் சொற்களுக்கு உயிர் கொடுக்க முடியும். இன்றைய தேவைக்கேற்பச் சொல்வளத்தைப் பெருக்கிக் கொள்ளவும் முடியும். பழைய சொற்களில் வேரின் உதவி கொண்டு எவ்வளவு புதிய சொற்கள் வேண்டுமானாலும் எளிதாக உருவாக்கிக் கொள்ள முடியும்'. என்று தனிநாயகம் அடிகளார் தெரிவித்த கருத்து மணவையாரின் மனதில் ஆழப் பதிந்தது. இதுவே