124
மணவையாரின் சமய நல்லிணக்கப பணிகள்
இரு சமயங்களைக் சார்ந்தவர்களிடையே தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் காரணமாக எழும் சிக்கலைச் சிலர் சமயச் சிக்கலாக மாற்றி, வன்முறைக்கு வழிவகுத்து விடுவதுமுண்டு.
எண்ணிக்கை மிகுதியாக இருந்தலே சமயத்துக்கு உறுதுணை எனச் சிலர் தவறாக எண்ணுவதுண்டு. இத்தகையோர் எவ்வாறேனும் தங்கள் சமயத்தைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கையைப் பெருக்க முயலலாம். இதனாலும் சமயச் சிக்கல்கள் நிகழ்வதுண்டு.
தாமாக மனமுவந்து தம் சமயத்தை விட்டுப் பிறிதொரு சமயத்தைத் தழுவுவோரும் நம்மிடையே உள்ளனர். இது ஒரு தனி மனிதரின் முடிவு என்பதில் ஐயமில்லை. ஆனால் எண்ணிக்கையைப் பெரிதாகக் கருதுவோர் இதனை வரவேற்பதும் அல்லது கண்டனம் செய்வதும் சமயச் சழக்குகளுக்குக் காரணமாகிவிடலாம்.
தமது சமயமே உயர்த்தது, உன்னதமானது எனக் கருதி அதனைக் கடைப்பிடிக்க ஒருவருக்குள்ள உரிமையை யாரும் மறுக்கவியலாது. ஆனால் பிற சமயங்களை இழித்தும் பழித்தும் பேச யாருக்கும் உரிமை இல்லை என்பதையும் யாரும் மறுக்கவியாலது. இதனை மறந்து ஒழுகுவதும் சமயத்தின் பெயரால் குழப்பங்கள் விளையக் காரணமாகி விடலாம்.
இவ்வாறு பல்வேறு காரணங்களால் நம் நாட்டில் சமயக் காழ்ப்புகள் தோன்றி வன்முறைக்கு வழிவகுத்துவிடுகின்றன. இத்தகைய வன்முறையும் இன்று மிகுதியாகி விடுவதால் நாட்டு நலனுக்கு ஊறு விளைவுக்கப்படுகின்றது. என்பதில் ஐயமில்லை.
ஆகவே நாட்டு நலனைப் பெரிதாக மதித்துப் போற்றுவோர் மணவையாரைப் போல பல்வேறு வகை