பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமுதன் அடிகள்

125


யிலும் சமய நல்லிணக்கப் பணிகளில் ஈடுபட்டு உழைத்தல் இன்று இன்றியமையாததாகிவிட்டது.

நாம் சார்ந்துள்ள சமயங்களின் நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் சம்பிரதாயங்களையும் பிறருக்கு எடுத்து விளக்குதலும், பிற சமயங்களின் நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் சம்பிரதாயங்களையும் நாம் அறிந்து தெளிவு பெறுதலும் அறிஞர்கள் இன்று ஆற்ற வேண்டிய கடமையாகும்.

அவ்வாறே தாம் சார்ந்த அல்லது பிறர் சார்ந்த சமயங்க ளைப்பற்றி நாட்டில் பரவியுள்ள தவறான கருத்துகளைத் தக்க ஆதாரங்களுடன் மாற்றிச் சரியான கருத்துகளைப் பரப் புவதும் ஆன்றோர்கள் ஆற்ற வேண்டிய கடமையாகும்.

இத்தகைய அறிவார்ந்த சமய நல்லிணக்கப் பணிகளில் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட்டு உழைத்துவரும் மணவையார் நாம் அனைவரும் பின்பற்றவேண்டிய ஒப்பற்ற சான்றோர் என்பதில் ஐயமில்லை.