பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126
கலைச் சொல்லாக்கத்தில்
மணவையாரின் பங்கும் பணியும்

டாக்டர். இராதா செல்லப்பன்
பேராசிரியர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்


தமிழால் முடியும் - சவால்

அறிவியலைத் தமிழிலே தர முடியுமா? என்ற கேள்வியை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு வெற்றிவாகை சூடிய பெருந்தகையர் மணவை முஸ்தபா அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேரா. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தமிழ்த்துறைப் பேராசிரியராக இருந்த பொழுது, பயிற்சி மொழி ஆங்கிலமா? தமிழா என்ற கருத்தரங்கினை நடத்தினார். இக் கருத்தரங்கில் கலந்து கொண்டார் மணவையார். அவர் கல்லூரி ஆசிரியர் நியமன உத்தரவைப் பெற்றிருந்த காலகட்டம் அது. கருத்தரங்கில் பேசிய பலரும் "தமிழில் அறிவியல் கலைச் சொற்களின் பஞ்சம் கடுமையாக உள்ள நிலையில் அறிவியல் பாடங்களைப் புகட்டுவது எளிதான காரியமல்ல; சொல்லப் போனால் இயலாத காரியமும் ஆகும்", என்று பேசினர். தமிழ் மொழியின் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடும் இக் கருத்துகளைக் கேட்ட மணவையாரின் தமிழுள்ளம் கொதித்தது. அப்போது அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு: "தமிழில் எந்தத் துறைச் செய்தியையும் சொற்செட்டோடும்