134
கலைச் சொல்லாக்கத்தில் மணவையாரின் பங்கும் பணியும்
கலைச் சொல்லாக்க நெறிமுறைகள்
அவருடைய கலைச் சொல்லாக்க நெறிமுறையைக் கண்டறிய மருத்துவக் கலைச் சொல் களஞ்சியம் பயன்படுத்தப்பட்டது. அவர் இக்களஞ்சியம் படைத்ததன் நோக்கங்களுள் ஒன்று, 'சாதாரண வாசகர்க்கும் பயன்படவேண்டும்’ என்பதாகும். அந்நோக்கம் இந்நூலில் இனிதே நிறைவேறியிருப்பதைக் காண முடிகிறது. சான்றாக Patch test என்ற ஆங்கிலச் சொல்லுக்கு 'திட்டுச் சோதனை', 'பசைப் பட்டைச் சோதனை' என்று கலைச் சொற்களைத் தந்து, அதற்கான விளக்கமாக தோலில் ஒட்டப்படும் பசைப் பட்டையினால் எதிர்வினை ஏதேனும் ஏற்படுகிறதா என்பதைக் கண்டறிவதற்காக நடத்தப்படும் தோல் சோதனை. சிவப்பு நிறமும் வீக்கமும் ஏற்படுமானால் ஒவ்வாமை உள்ளது என அறியலாம் என்று விளக்குகிறார். மருத்துவம் பயிலா சாதாரண மனிதனுக்கும் புரியும் வகையில் விளக்கங்கள் அமைந்துள்ள நிலை இக் களஞ்சியத்தின் சிறப்பு.
ஒரு ஆங்கிலச் சொல்லிற்கு நேராக ஒன்றுக்கு மேற்பட்ட கலைச் சொற்களைத் தந்துள்ளார்.
Pathogen பிணியூக்கி;
நோயுண்டாக்கும் நுண்ணுயிர்;
நோயணு.
Pathogen என்பதற்கு ஈடாக, மூன்று தமிழ்க் கலைச் சொற்கள் தரப்பட்டுள்ளன. ஆசிரியர் இம்மூன்று சொற்களையும் ஒத்துக் கொள்கிறாரா? அல்லது அவற்றுள் ஒன்றினைத் தரப்படுத்திப் பயன்படுத்தும் பணியை வாசகர்களுக்கு விட்டுவிடுவதற்காக இவ்வுத்தியைக் கையாளுகிறாரா என்ற ஐயமும் எழுகிறது. அதனையடுத்து மற்றொரு கேள்வியும் வாசகனுள் பிறக்கிறது. அவர் கலைச் சொற்களின் வைப்பு முறையை, ஏற்பு முறையின் அடிப்படையில் தந்திருக்கி