உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் இராதா செல்லப்பன்

135


றாரா? என்பதே அது. இருப்பினும், ஓர் ஆங்கிலச் சொல்லுக்கு நேராக, ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ்க் கலைச் சொற்களைத் தந்திருப்பதற்கு முக்கியமான ஒரு காரணம் இருப்பது தெளிவாகிறது. புதியதாக மருத்துவ நூலைப் படைக்க விழைவோர் இச்சொற்களுள் தமக்குப் பொருத்தம் எனத் தோன்றியதை எடுத்துப் பயன்படுத்த நல்ல ஒரு வாய்ப்பினை அளித்திருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

பதிவுச் சொற்களாக, ஆங்கிலச் சொல் மட்டுமன்றி, தமிழ்ச் சொற்களும் இடம்பெறுகின்றன. abdomen என்ப தற்கு, வயிறு, அடிவயிறு, அகடு, உதரம் என்ற சொற்களைத் தரும்போது, abdomen என்பது பதிவுச் சொல். அடுத்த பதிவு அடிவயிறு தொடர்பான கருத்துகள். முனைப்பான அடிவயிறு, தொங்கலான அடிவயிறு, படகுவடிவ அடிவயிறு, அடிவயிற்றுவலி என அடிவயிறு தொடர்பான கருத்துகளை ஒரே இடத்தில் தந்திருப்பதனால், இது அகராதி வடிவில் அமைந்த கருத்தடிப்படைக் களஞ்சியமாக மிளிர்கிறது. 'மருத்துவ, அறிவியல், தொழில் நுட்பக் கலைச் சொல் களஞ்சிய அகராதி' நூலில் இந்த அமைப்பு இல்லை. அதனால்தான் போலும், அந்த நூலின் தலைப்பில் அகராதி என்ற பெயர் இடம் பெற்றிருக்க 'மருத்துவக் கலைச் சொற் களஞ்சியம்' நூலில் அகராதி நீக்கப்பட்டுள்ளது எனலாம்.

பெயர்ச் சொற்கள் மட்டுமன்றி, பெயரடைக்கும் வினைச் சொற்களும் பதிவுச் சொற்களாக அமைந்துள்ளன. (எ.கா) abacterial, abiogenic, abduct, abort.

பல புதிய தமிழ்ச் சொற்கள் இவரது களஞ்சியத்தில் இடம் பெறுகின்றன. சவ்வுப்பை என்பதற்குச் சுருக்கமான ஒரு சொல்லாக ‘வபை’ என்பதை அடைப்புக் குறிக்குள் தரு