பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

கலைச் சொல்லாக்கத்தில் மணவையாரின் பங்கும் பணியும்


கிறார். 'சுரிப்பு' என்பது மற்றொரு சொல். abduction என்பதற்குத் 'தசை மையச் சுரிப்பு' என்ற சொல் தரப்பட்டுள்ளது.

இம்மருத்துவக் கலைச் சொல் களஞ்சியத்தில் மருந்து வகைகள் ஒலிபெயர்ப்புச் சொற்களாகவே உள்ளன. ஒலி பெயர்ப்புச் சொற்களில் இயன்ற வரையில் தமிழ் எழுத்துக் களை மட்டுமே பயன்படுத்தியுள்ளார்.

Acetate அசிட்டேட்
addison's disease அடிசன் நோய்

அதே சமயம், உச்சரிப்பு மாறுபாடு ஏற்படாமல் இருக்க, சில இடங்களில் நெகிழ்ச்சியளித்து வட எழுத்துக்களைப் பயன்படுத்தும் நிலையும் காணப்படுகிறது.

acetohexamide அசிட்டோஹெக்சாமைடு
adenosine diphosphate அடினோசின் டைஃபாஸ்ஃபேட்

சில ஆங்கிலச் சொற்களைத் தமிழ்ப்படுத்தும்போது, கலப்பு மொழி பெயர்ப்பு உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. இம்முறையில், ஆங்கிலக் கலைச் சொல்லின் ஒலிபெயர்ப்புப் பகுதியைத் தமிழிலும் ஒலி பெயர்த்து மொழி பெயர்க்கத்தக்க பகுதியை மொழி பெயர்த்தும் பயன்படுத்தியுள்ளது பாராட்டத் தக்கதாகும்.

acetonaemia அசிட்டோனிரத்தம்
acetonuria அசிட்டோன் நீரிழிவு

Diagnosis என்ற சொல்லிற்குரிய தமிழ்ச் சொல்லைக் கண்டறிய முனைந்த மணவையாருக்குக் குறள் ஒன்று நினைவுக்கு வருகிறது. 'நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்'. விளைவு 'நோய் நாடல் சோதனை' என்ற தமிழாக்கம்.