உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

கலைச் சொல்லாக்கத்தில் மனவையாரின் பங்கும் பணியும்


(optholmology) மற்றொன்று மனநல மருத்துவத் துறை (Psychiatry). இந்த இரண்டு துறைக்குமான விளக்கங்கள் (1), (2) என எண்ணிடப்பட்டுத் தரப்பட்டுள்ளன. ஆனால், இவ் விளக்கங்களில் துறைப் பிரிவுகளின் சுருக்கங்களைத் தந்திருந்தால் இன்னும் மெருகேறியிருக்கும்.

"பாண்டு போன்ற இந்திய மருத்துவக்கலைச் சொற்களும் இக்களஞ்சியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இக்களஞ்சியத்தின் மற்றொரு சிறப்பாகும்.

இந்த மருத்துவக் கலைச் சொல் களஞ்சியத்தை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் பார்க்கும்போது, கீழ்க் காணும் முடிவுகள் பெறப்படுகின்றன.

1. 'மருத்துவக் கலைச் சொல் களஞ்சியம்' என்ற தனி யொரு தொகுதியாக வெளியிடப்படும் வகையில் முதன் முதலாக வெளியிடப்பட்ட பெருமையுடையது.

2. ஆங்கிலச் கலைச் சொற்களுக்கு இணையாகப் பல தமிழ்க் கலைச் சொற்களைத் தந்திருப்பது, வாசகர்கள் அல்லது பயனிட்டாளர்களுக்குச் சொல்லைத் தேர்வு செய்யும் வாய்ப்பைத் தருகிறது.

3. விளக்கங்கள் என்ற நிலையில் சொற் கருத்துடன் சில இடங்களில் முக்கியமான குறிப்புகளும் இடம் பெறுகின்றன.

மருத்துவக் கருத்துகளைத் தமிழிலே சொல்ல முடியுமா? கலைச் சொற்களைத் தமிழிலே உருவாக்க முடியுமா? என்ற கேள்விக்குரிய விடையாக இக்கலைச் சொல் களஞ்சியம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக, பல்லாயிரக்கணக்கான கலைச் சொற்களைத் தேர்வு செய்தும் உருவாக்கியும் பல கலைக் களஞ்சியங்களை வெளியிட்டுள்ள மணவை முஸ்தபா அவர்களுக்குத் தமிழுலகம் என்றும் கடமைப்