பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140



தமிழில் அறிவியல் இலக்கியமும்
மணவையார் சிந்தனையும்

ராம்குமார்


அர்ப்பணிப்பு உணர்வு

தமிழில் அறிவியல் முன்னேற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவும், தமிழை ஒரு அறிவியல் மொழியாகச் செழுமையடைய வைக்க வேண்டும் என்பதற் காகவும் தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டவர் மணவை முஸ்தபா. கடந்த நாற்பது ஆண்டுகளாக ஒரே நோக்கத்தோடு, ஒரே திசை நோக்கி பயணம் செய்து கொண்டிருப்பவர் அவர்.

தமிழில் அறிவியல் இலக்கியம் குறித்து மணவை யாரின் சிந்தனைகளை இக்கட்டுரையில் ஆராயப் புகும் போது அவரது பணியை இரண்டு வகைகளாகப் பிரித்துக் காண்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். அவை:

(1) தமிழில் அறிவியல்

(2) அறிவியல் இலக்கியம்

தமிழில் அறிவியல்

முதலாவதாக தமிழில் அறிவியல் என்ற நோக்கில் பார்ப்போம். அறிவியல் என்பது உலக முழுமைக்கும்