பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராம்குமார்

141


பொதுவானது. அறிவியல் முன்னேற்றம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. அதை அவரவர் தங்களுக்குத் தெரிந்த மொழிகளில் எழுதுகிறார்கள். ஆனால், உலக அளவில் அறிவியல் வளர்ச்சி நிலைகளை ஆங்கில மொழியிலேயே மிக அதிகமாக எழுதி வைத்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் அறிவியல் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர்களில் அதிகம் பேர் ஆங்கில மொழி அறிந்த வர்கள் என்பதுதான். இந்த அறிவியல் முன்னேற்றங்களைப் பிற மொழியினர் அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் அந்தந்த மொழியும், ஆங்கில மொழியும் அறிந்த வர்கள் அவர்களது தாய் மொழிகளில் மொழி பெயர்த்து எழுதி வருகிறார்கள்.

தமிழ் அறிவியலாரின் ஆர்வக்குறைவு

இந்த வகையில் ஃபிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய, சீன மொழிகளில் உலக அறிவியல் முன்னேற்றங்கள் அவ்வப்போது அறிவியல் அறிஞர்களால் எழுதப்பட்டு உடனுக்குடன் அந்த மொழிகளில் பேசுபவர்களுக்குப் போய்ச் சேர்ந்துவிடுகின்றன. தமிழ் மொழி இந்த வகையில் காலத்தோடு ஈடுகொடுக்க முடியாத நிலையில் உள்ளது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அறிவியல் அறிஞராகப் பரிணமித்தவுடன் ஆங்கில மொழியில் எழுதுவதிலேயே அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார்களேயொழிய தாய் மொழியில் அறிவியலை எழுதவேண்டும் என்ற ஆர்வம் குறைந்தவர்களாகவே உள்ளார்கள். நோபல் பரிசு பெற்ற தமிழரான சர்.சி.வி இராமன் முதலாக இப்போது உலகறிந்த, நாடறிந்த அறிவியல் அறிஞர்களாக உள்ள, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், உலக அறிவியல் முன்னேற்றங்களை, தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை எந்த அளவுக்குத் தமிழ் மொழியில் எழுதி வைத்திருக்கி