பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

தமிழில் அறிவியல இலக்கியமும மணைவியார் சிந்தனையும்


றார்கள் என்பதை சற்று ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மை விளங்கும்.

அறிவியல் உணர்வுள்ள தமிழறிஞர்

ஆகவே, அறிவியல் அறிஞர்களாக உள்ள தமிழர்களை மட்டுமே நம்பியிராமல் அறிவியல் உணர்வு (Scientific temper) உள்ள தமிழறிஞர்கள் அறிவியல் முன்னேற்றங் களைத் தமிழில் எழுதுவதன் மூலம்தான் தமிழில் அறிவியல் வளர முடியும். அறிவியல் கருத்துகள், சிந்தனைகள் தமிழில் மேம்பட்டு பல்கிப் பெருக முடியும்.

அந்த வகையில் தமிழில் அறிவியல் செய்திகளை எழுத வேண்டும்; அதற்கு உதவிடும் வகையில் அறிவியல் சொல்லாக்கங்களைச் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வரும் தமிழறிஞர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் தலையாயவராக விளங்குபவர் மணவை முஸ்தபா அவர்கள். தமிழில் அறிவியல் முன்னேற்றங்களைக் கொண்டு வருவதிலும், புதிய அறிவியல் சொல்லாக்கங்களைத் தமிழில் செய்வதிலும் அவர் தீவிரமாகக் கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பாடுபட்டு வருகிறார்.

தமிழில் அறிவியல் குறித்த அவரது செயல்பாடுகள் வரலாற்றுச் சாட்சியங்களாக நம் கண்முன்னே எழுந்து நிற்கின்றன என்றாலும் இது தொடர்பான அவரது சிந்தனைகளை 'காலம் தேடும் தமிழ்' என்ற தலைப்பில் அவர் எழுதிய நூலில் தெளிவாக விளக்கியுள்ளார்.

சங்கத் தமிழ் காட்டும் அறிவியல்

இந்நூலில் சங்ககாலத் தமிழரிடையே இருந்த அறிவியல் அறிவையும், உணர்வையும், வானவியல் குறித்த