பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராம்குமார்

143


சங்கத் தமிழர் கொண்டிருந்த சிந்தனைகளையும் சில எடுத்துக்காட்டுகளின் மூலம் விளக்குகிறார்.

புறநானூற்றின் இரண்டாவது பாடலான

"மண்டி னிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீமுரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத் தியற்கை"

என்ற

பாடல் வரிகளில் இந்நிலவுலகானது மண், ஆகாயம், காற்று, தீ, நீர் ஆகிய ஐம்பூதங்களால் ஆனது என்பதை சங்கத் தமிழர்கள் அறிந்திருந்தனர் என்கிறார்.

ஒரு படி பாலையோ, நீரையோ முக்கால்படியாக சுருக்கவியலாது; நீர்ப் பொருளுக்கு சுருங்கும் தன்மை இல்லை (Non-Compressibility of Liquids) என்று அறிவியல் அறிஞர் பாஸ்கல் ஆராய்ந்து கூறியதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஒளவையார்,

"ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது..."

என்று பாடியுள்ளதை மணவையார் எடுத்துக் காட்டியுள்ளார்.

தமிழ் அறிஞர்கள் கருத்து

அறிவியல் பார்வை, அணுகுமுறை குறித்து பாரதியார், பாரதிதாசன், மயிலை சீனி, வேங்கடாசாமி, வா.செ. குழந்தைசாமி, போன்ற தமிழறிஞர்கள் விளக்கியுள்ளதை எடுத்துக் காட்டியுள்ளார்.