பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

தமிழில அறிவியல இலக்கியமும மணவையார் சிந்தனையும


அறிவியல் தமிழ் நூல்கள்

அறிவியல் தமிழ் நூல்கள் என்ற கட்டுரையில் தாய்மொழி மூலம் அறிவியலைப் படிக்கும் வாய்ப்பு ஏற்படுவதன் மூலமே அறிவியல் அறிவு பெருக முடியும் என்று துவங்கி, தமிழ்மொழி 1830ஆம் ஆண்டுவாக்கில்தான் தமிழ் பயிற்சி மொழித்திட்டம் ஆட்சியாளர்களால் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்கிறார். 1832இல் இரேனியஸ் பாதிரியர் எழுதிய 'பூமி சாஸ்திரம்' என்ற நூலே ஆங்கில அறிவியலை ஒட்டி எழுந்த முதல் தமிழ் நூலொன்றும், 1849இல் வெளிவந்த 'பால கணிதம்' என்ற நூலே தமிழின் முதல் கணித நூலென்றும், 1852இல் ஃபிஷ் கிரீன் மொழி பெயர்ப்பில் வெளிவந்த 'அங்கா தீபாத சுகரணவாத உற்பாவன நூல்' டாக்டர் கட்டர் எழுதிய Anatomy Physiology and Huygene என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமே தமிழில் வெளிவந்த முதல் ஆங்கில மருத்துவ நூலென்றும் அறிந்து கொள்கிறோம்.

இதழியலின் பங்கு

அறிவியல் வளர்ச்சியின் தமிழ் இதழியலின் பங்கை விளக்குகையில் 1831இல் வெளிவந்த முதல் தமிழ் இதழான 'தமிழ் மேகசீன்' முதல் அகத்திய வர்த்தமானி (1870), சுகசீவனி (1887), சுகாதார போதினி (1891), ஞான போதினி (1897), ஆரோக்கிய வழி (1908), ஆயுர்வேத பாஸ்கரன், தொழிற்கல்வி (1914), வைத்தியக் கலாநிதி (1914), தமிழர் நேசன் (1911), தன்வந்திரி, ஆயுர்வேதம் போன்ற தோன்றி மறைந்துபோன இதழ்களையும், இன்றுவரை தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நல்வழி (1900) கலைக்கதிர் (1949), யுனெஸ்கோ கூரியர் (1967) ஆகிய தமிழ் இதழ்களின் அறிவியல் பணிகளையும் மணவையார் விரித்துரைக்கிறார். தமிழகப் பல்கலைக் கழகங்கள், பலதரப்பட்ட அரசு, பொது