ராமகுமார்
145
அமைப்புகள் தமிழில் அறிவியல் வளர்ச்சிக்கு ஆற்றும் பணிகளையும் விளக்கியுள்ளார்.
மொழிபெயர்ப்பின் 12 வகைகள்
அறிவியலில் மூல நூல்களும், அடிப்படை அறிவியல் நூல்களும் தமிழில் அதிகம் இல்லாத சூழ்நிலையில் மொழி பெயர்ப்பு மூலம் மட்டுமே தமிழில் அறிவியலை வளர்க்க முடியும். யுனெஸ்கோ கூரியர் ஆசிரியராகவும், ஒரு சிறந்த மொழி பெயர்ப்பு வல்லுநராகவும் விளங்கிவரும் மணவை முஸ்தபா அவர்கள் மொழி பெயர்ப்பு என்னும் ஈடு, இணையில்லா மொழி இணைப்புப் பாலத்தின் நுட்பங்களை ஆழமாகவும், அகலமாகவும் அறிந்து கரைசேர்ந்தவர்.
தமிழ் மொழியின் மூல இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் மொழி பெயர்ப்பைப் பற்றிக் குறிப் பிடும் போது
"தொகுத்தல் விரித்தல்
தொகைவிரி மொழி பெயர்த்து
அதர்ப்பட யாத்தலொடு
அவை மரபினவே”
என்று மரபியலில் கூறியுள்ளதை அடியொற்றி மொழி பெயர்ப்புக் கலையின் இலக்கணத்தை மணவை முஸ்தபா வகுத்துள்ளார். அவரது வரையறையின்படி மொழி பெயர்ப்பைப் பின்வரும் பன்னிரண்டு பெரும் பிரிவுகளாக வகைப் படுத்துகிறார்.
1. சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பு (Literal Translation)
சொல்லுக்கு சொல் மொழி பெயர்ப்பது சில சமயங்களில் மூல ஆசிரியன் சொல்ல வந்த கருத்துக்கு மாறான/0