பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

தமிழில் அறிவியல் இலக்கியமும் மணவையார் சிந்தனையும்


களில் சிறுவர்களுக்கு ஏற்ற வகையில் மொழி பெயர்த்துத் தருவதே சிறுவருக்கான மொழிபெயர்ப்பாகும்.

இவ்வாறு பன்னிரண்டு வகையினவாக வகுத்து, மொழிபெயர்ப்புத் துறையின் வளமான வளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ளார் மணவையார்.

கலைச் சொல்லாக்கம்

தமிழில் அறிவியல் வளர்ச்சி செம்மையாகச் சொல்லப்பட வேண்டுமானால் அதற்குத் தடையாக இருப்பது போதிய கலைச் சொற்கள் பல்வேறு துறைகளில் தமிழ் மொழியில் உருவாக்கப்படாமல் இருப்பதே என்பதை மணவையார் உணர்ந்துள்ளார். ஆகவே, கலைச் சொல்லாக்கத் தினைத் தன் அறிவியல் பணியில் முக்கிய இலக்காகக் கொண்டுள்ளார். வேறு மொழிச் சொற்கள் தமிழில் வந்து கலக்கும்போது தொல்காப்பியர் கூறியுள்ளபடி 'வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே; என்ற அடிப்படையில் தமிழ் எழுத்துக்களின் ஒலிப்பிலக்கணத்துக்கேற்ப மாறுதல் பெறவேண்டும் என்று கருதுகிறார் மணவையார்

கலைச் சொல்லாக்க முயற்சிகள்

இலக்கியக் கலைச்சொற்களில் மொழித் தூய்மை பேணுவதைப் போல அல்லாமல், அறிவியல் கலைச் சொற்களைப் பொறுத்தவரை மொழித்துய்மை ஒரளவே கடைப் பிடிக்கப்படவேண்டும் என்றும் அறிவியல் சொல்லாக்கத்தில் உணர்ச்சியைவிட அறிவுக்கே முதலிடம் என்றும் கூறுகிறார். அறிவியல் கலைச் சொல்லாக முயற்சிகளாக 1923இல் அமைக்கப்பட்ட கலைச் சொல்லாக்கக் குழு, 1934இல் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் உருவாக்கிய கலைச்சொல் தயாரிப்புக்குழு உருவாக்கிய 10,000 கலைச்