பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராமகுமார்

151


சொற்கள், 1955இல் செய்யப்பட்ட இலங்கையரசின் கலைச் சொல்லாக்க முயற்சி, 1959இல் அமைக்கப்பட்ட கலைச் சொல்லாக்க வல்லுநர் குழு, 1971இல் தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனம் வெளியிட்ட புதிய கலைச் சொல்லாக்கத் தொகுதி, தனிப்பட்டவர்களின் சொல்லாக்க முயற்சிகள், கலைச்சொல்லாக்கத்தில் யுனெஸ்கோ கூரியர் போன்ற இதழ்களின் பங்கு, பதிப்பகங்கள், பல்கலைக் கழகங்களின் பங்கு ஆகியவைகளை மிக விரிவாக விளக்கிக் கூறியுள்ளார்.

சொல்லாக்க முறைகள்

பன்னாட்டு கலைச்சொற்களான என்சைம், ஐசடோப், ஓசோன் போன்றவைகளையும், ஆம்பியர், ஓம் போன்ற நினைவுப் பெயர்களையும், ரேடார், லேசர் போன்ற குறும்பெயர்களையும், வாய்பாடுகளையும், சூத்திரங்களையும், ஒலிபெயர்ப்பாக அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இவரது கருத்தாகும்.

ஒலிபெயர்ப்பு - புத்திலக்கணம்

ஒலிபெயர்ப்பு மேலும் விரிவாக ஆராயப்படவேண்டுமென்றும் அறிவியலுக்கு தனி ஒலிப்பிலக்கணம் வேண்டுமென்றும் கருதும் மணவையார் தமிழில் அறிவியல் வளர தமிழ் எழுத்துச் சீர்மை செய்யப்படவேண்டுமென்றும், தமிழுக்குக் காலத்திற்கேற்ற புத்திலக்கணம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் காரண காரியங்களுடன் எடுத்துரைக்கின்றார்.

அறிவியல் இலக்கியம்

அறிவியல், இலக்கியம் என்ற இரண்டு சொற்களும் ஏறக்குறைய எதிர்மறைச் சொற்களாகவே மொழியியலாளரால் கருதப்படுவதுண்டு. அறிவியல் என்பது பகுத்த