பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

தமிழில் அறிவியல் இலக்கியமும மணவையார் சிந்தனையும்


றிவைக் கொண்டமைந்து எதுவாக இருந்தாலும் என்ன, ஏன், எப்படி என்ற கேள்வி உலைக் களத்தில் இடப்பட்டு அச்சோதனையில் புடம்போட்டு வெளிவருவதே அறிவியலாகும். திரும்பச் செய்யப்படுதல் (Repeatability) என்பது அறிவியலின் இன்றியமையாத தன்மை. ஆனால், இலக்கியம் என்பது அறிவை அடிப்படையாகக் கொண்டதாக இல்லாமல் உணர்வை அடிப்படையாகக் கொண்டது. மகிழ்வூட்டும் இன்பத்திற்கே இதில் முதலிடம் தரப்படுகிறது. கற்பனைத் தேரிலேறி சிந்தனைச் சாட்டையை வீசி, நினைத்தவாறெல்லாம் பயணம் செய்வதே இலக்கியப் பயணம்'

இந்த இரண்டும் இணைய முடியுமா என்றால் முடியும், அறிவியல் கண்ணோட்டத்தில் இலக்கியங்களைப் படைப்பது, அறிவியலைப் பின்னணியாகக் கொண்டு படைப்பிலக்கியங்களை உருவாக்குவது. அறிவியல் கற்பனையில் இலக்கிய உருவாக்கம், அறிவியல் புனைகதை (Science Fiction) இவ்வகை. தமிழில் இத்தகைய அறிவியல் இலக்கியம் எவ்வாறு அமைந்தள்ளது என்பதை காலம் தேடும் தமிழ் நூலில் அறிவியல் இலக்கியம் என்ற கட்டுரையில் எடுத்துரைப்பதுடன் 'தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்' என்ற இத்துறையில் அமைந்த முதல் நூலொன்றையும் மணவையார் எழுதியுள்ளார். அவற்றில் அவரது சிந்தனை ஓட்டங்கள் என்னும் பூங்காவில் நாம் சற்று காலாற உலா வருவோம். பண்டைத் தமிழில் அறிவியல் இலக்கியம்

புறநானூறு, பதிற்றுப் பத்து மற்றும் பல சங்க இலக்கியங்களும், தொன்மை இலக்கண நூலாகிய தொல்காப்பியமும் தமிழரின் போரியல் (Military Science) பற்றி விரிவாகவே பேசுகின்றன என்றாலும் அக்கலையை விளக்கும் தனி நூல்கள் தமிழில் இருந்திருக்க வேண்டும் என்றும் அவைகளைக் கால வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது போலும்