பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ராமகுமார்

153


என்பது இவரது கருத்தாக உள்ளது. சித்தர்கள் பாடல்களில் மருத்துவ அறிவியல் சார்ந்த செய்திகள் ஏராளமாக விரவிக்கிடக்கின்றன என்றும் புறநானூற்றில் (பாடல் 39) 'தூங்கெயில் எறிந்த தொடுதோட் செம்பியன்' என்ற தொடரால் ஆகாயக் கோட்டை (Aircastle) பற்றிய அறிவு சங்கப் புலவருக்கு இருந்திருக்க வேண்டும் என்றும் அது இன்றைய விண்வெளி நிலையம் (Space Station) போன்றது என்றும் கருதுகின்றார்.

முதல் அறிவியல் தமிழ்க் கவிதை நூல்

தமிழில் அறிவியல் செய்திகளைக் கவிதையில் கூறும் முதல் நூல் 1949இல் வித்துவான் ப. இராமலிங்கம் எழுதிய 'அறிவு' நூல் வழிகாட்டி'யாகும். இயற்கைச் சாத்திரம்', 'இரசாயனச் சாத்திரம்', 'பெளதிகச் சாத்திரம்', என்ற முப்பெரும் பிரிவுகளைக் கொண்ட இந்நூலின் இறுதியில் 'பொருளகராதி' சேர்க்கப்பட்டிருப்பது ஒரு குறிபிடத்தக்கது. இந்த வரிசையில் கவிஞர் வைரமுத்துவின் 'தண்ணீர் தேசம்' நூலை சிறந்த படைப்பென்கிறார் மணவையார்.

“ஒரு டன் கடல் தண்ணீர்
0,000004 கிராம் தங்கம் வைத்திருக்கிறது
ஆனால் 72 சதவிகிதம் மட்டுமே தண்ணீர்
கொண்ட உடலில் நீ 50 கிலோ கிராம்
தங்கமல்லவா வைத்திருக்கிறாய்
நான் உன்னைக் காதலிப்பேனா?
கடலைக் காதலிப்பேனா?"

என்று ஒரு காதலன் காதலியைப் பார்த்துப் பாடுவதில் அறிவியல் கலக்கிறது.

சிறுவர் அறிவியல் இலக்கியங்கள்

தமிழில் பெரியவர்களுக்காக எழுதப்பட்ட அறிவியல் படைப்பிலக்கியங்களைவிட சிறுவர்களுக்காக எழுதப்பட்