பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/163

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.ராமகுமாா்

155


எந்த மொழியில் எழுத முற்படுகிறோமோ அந்த மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றவராகவும், எழுத்தாற்றல்மிக்கவராகவும், கற்பனைத் திறனும், கதை சொல்லும் ஆற்றலும் கைவரப் பெற்றவராகவும் இருக்க வேண்டும். தமிழறிவோடு அறிவியல் நுட்பப் புலமையுடையவர்களே சிறந்த அறிவியல் இலக்கியங்களைப் படைக்க முடியும் என்பது மணவையார் கருத்தாகும்.

இதற்கு வழிகாட்டும் முறையில் தனது 'தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்' என்ற நூலில் எச்.ஜி. வெல்ஸ், பால் ஆண்டர்சன், பிராட்பரி, ராபர்ட் ஹைன்லைன், ஜூல்ஸ் வெர்ன், ஐசக் அசிமோவ், ஹோரஸ், ஹெர்வே பாசின், அலெக்சாண்டர் பியலியே, யூரிரிடால்கு சின், ஹியூகோ ஜென்ஸ் பேக், இரானோ டிபெர்ஜெராக், தியூக்ரோக் ஆர்தர்சி, கிளார்க், ராபர்ட் சில்வர் பெர்க், வங்கி ராப்ட், ஜான்விண்ட்ஹாம், கான் சென்ட்சேவ், ஜான் கேம்பல் போன்ற மேனாட்டு அறிவியல் புனை கதைப் படைப்பாளர்களை விளக்குகிறார்.

பின்னடைவுக்குக் காரணம்

தமிழில் அறிவியல் இலக்கியம் என்பது அதிகம் சிந்திக்கப்படாத ஒரு துறையாகவே இன்றுவரை உள்ளது என்பதை கவலையுடன் கூறும் மணவையார், தமிழ் எழுத்தாளர்கள் பொழுது போக்கு இலக்கியத்திற்கு அளித்து வரும் முக்கியத்துவத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட, பொழுதைப் பயனுள்ள முறையில் ஆக்கும் அறிவியல் இலக்கியப் படைப்புகளின்பால் திருப்பவில்லை என்பதுதான் உண்மை நிலை என்று தமிழ் எழுத்தாளர்களைச் சாடுகிறார்.

அறிவியல் புனைகதைகள் அதிகம் வெளிப்படாமைக்கு தமிழ் இதழ்கள் ஒருவகையில் காரணமாகும் என்று