உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

தமிழில் அறிவியல் இலக்கியமும் மணவையாா் சிந்தனையும்


கூறுவதுடன் வணிக நோக்கை அடிப்படையாகக் கொண்ட தமிழ் இதழ்கள் பாலுணர்வு விஞ்சி நிற்கும் கதைகளை வெளியிடுவதில் காட்டும் ஆர்வத்தில் பத்து விழுக்காடு கூட அறிவியல் அடிப்படையில் சிந்திக்கத் தூண்டும் அறிவியல் புனைகதைகளுக்கு இடமளிப்பதில்லை என்று தன் ஆதங்கத்தை வெளியிடுகிறார். இந்த வகையில் சிற்றிதழ்களின் பணி சற்று ஆறுதல் அளிப்பதாகக் கூறுகிறார்.

ஆயினும், பெண் வாசகிகளிடையே அறிவு பூர்வமான அறிவியல் இலக்கியங்களைப் படிப்பதிலும், அவைகள் அசைபோடுவதிலும் ஏற்பட்டு வரும் அதிகமான ஆர்வமும், ஆங்கில அறிவும், அறிவியல் கல்வியும் பெற்ற புதிய தலை முறையினர் பெருகிவருவதும் அறிவியல் இலக்கியத்திற்கு வரவேற்பு கூடிக்கொண்டே வருகிறது என்று நம்பிக்கை கொள்கிறார்.

ஒளிமயமான எதிர்காலம்

தமிழில் அறிவியல் படைப்புகள் வளரவேண்டும் என்ற முனைப்புடன், அறிவியல் இலக்கிய வளர்ச்சியை ஆராய்வதுடன் அத்துறையில் வழிகாட்டியாகவும் விளங்கும் மணவை முஸ்தபா அவர்கள் அறிவியல் தமிழுக்கு ஒரு விடிவெள்ளியாகக் கருதப்படவேண்டியவர். அவர் காட்டும் ஒளிமயமான அறிவியல் இலக்கியம் தமிழ் மொழியில் செழித் தோங்கும் என்பது திண்ணம்.