பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

தமிழக களஞ்சியம மணவையார்


அவை பெரியவர்களை மனதிற்கொண்டு உருவாக்கப்பட்டவைகளாகவே உள்ளன. எனவே, சிறுவர்கட்குப் பெரிதும் பயன்படக்கூடிய அறிவியல் களஞ்சியம் உருவாக்கி வெளி யிடுவதன் மூலம் தமிழில் குறும் "சிறுவர் அறிவியல் களஞ்சியம்" இல்லையே என்ற குறையை நீக்க வேண்டும் என்ற மனவுணர்வு எனக்குப் பல்லாண்டுகளாகவே இருந்து வந்தது. சிறுவர்கட்கு மட்டுமல்லாது ஆரம்பப் பள்ளியோடு அல்லது நடுநிலைப் பள்ளிப் படிப்போடு படிப்பை விட்டு விட்டவர்களும், அறிவியல் செய்திகளை மேன்மேலும் அறிந்து கொள்ளவேண்டும் எனும் வேட்கை கொண்ட இளையர், பெரியவர்கட்கும் பயன்படத்தக்க ஒரு குறும் (Mini) அறிவியல் களஞ்சியத்தை உருவாக்கி அறிவியல் வேட்கை கொண்டவர்களின் அறிவுப் பசியைப் போக்க வேண்டுமென விழைந்தேன். அவ்விழைவின் பயனாக உருவானதுதான் "இளையர் அறிவியல் களஞ்சியம்" எனும் இந்நூல்" எனக்கூறி தெளிவுபடுத்துகிறார். மேலும், நூலின் சிறப்புத் தன்மையை விவரிக்கும்போது,

"முன்பு 'சிறுவர் கலைக் களஞ்சியம்' எனும் பெயரில் ஒரு குறும் (Mini) கலைக் களஞ்சியத்தைச் சிறுவர்க்கென உருவாக்கி வெளியிட்டேன். அப்போது எனக்குக் கிடைத்த பட்டறிவை அடித்தளமாகக் கொண்டு இந்த அறிவியல் களஞ்சியத்தை உருவாக்கியுள்ளேன். சிறுவர்கள், படிப்பைப் பாதியில் தொடர இயலாமல் விட்ட இளைஞர்கள் ஆகியோரை மனதிக் கொண்டு, அவர்கட்குள்ள சொல்லாட்சித் திறனையும் அறிவியலைப் புரிந்து கொள்ளும் ஆற்றலையும் கருத்திற்கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. எளிய சொற்களைக் கொண்டு, சிறுசிறு சொற்றொடர்கள் மூலம் ஏராளமான படங்களோடு அறிவியல் செய்திகள் விவரிக்கப்பட்டுள்ளன. இவை படிப்போருக்கு மிக எளிதாக விளங்கவும், அவை படிப்போர் மனதுள் சென்று