பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

தமிழ்க களஞ்சியம் மணவையாா்



பள்ளியில் பயிலும்போதே சொல்லாய்வு என்பது இவருக்கு மிகவும் பிடித்தமான பொழுது போக்காக அமைந்திருந்தது. சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள பழைய தமிழ்ச் சொற்களை வழக்கற்றுப்போன பழஞ் சொற்களை - ஓரளவு உருமாற்றி புதிய சொல் போன்று பயன்படுத்துவது இவரது பழக்கமாகும். இப்பழக்கமே நாளடைவில் பழைய வேர்ச் சொற்களைக் கொண்டு பொருத்தமான பகுதி, விகுதி இடை நிலையோடு கூடிய புதுப்புதுச் சொற்களைப் படைப்பது இவருக்குக் கைவந்த கலையாக அமைந்துவிட்டது. அதிலும் அறிவியல் துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் ஆங்கிலக் கலைச் சொற்களுக்கேற்ற புதிய தமிழ்க் கலைச் சொற்களை உருவாக்குவது இவருக்கு மிகவும் பிடித்தமான பணியாகும். மிகக் கடினமான பணியை தன் வாழ்வின் தலையாய பணியாகக் கடைப்பிடித்து வருகிறார். இதன்மூலம் தமிழின் தனிப்பெரும் ஆற்றலை வெளிப்படுத்த இயல்வதோடு, இடையிடையே தமிழ் மொழி ஆற்றல் மிகு அறிவியல் மொழியாக அமைந்திருப்பதை முழுமையாக வெளிப்படுத்தி உணர்த்த முடியும் என்பது இவர் கருத்தாகும்.

இவரது கலைச் சொல் உருவாக்கத்துக்கு மாபெரும் உந்து சக்தியாக அமைந்திருப்பது இவரை நிர்வாக ஆசிரியராகக் கொண்டு கடந்த முப்பத்திரண்டு ஆண்டுகளாக வெளி வந்து கொண்டிருக்கும் 'யுனெஸ்கோ கூரியர்' சர்வதேச இதழாகும். இதில் அரசியல் தவிர்த்துள்ள அனைத்துத் துறை செய்திகளும் வெளியிடப்படுகின்றன. அவற்றுள்ளும் அறிவியல் தொடர்பான செய்திகளும் கட்டுரைகளும் முதலிடம் பெறுகின்றன. மேல்நாடுகளில் அண்மையில் கண்டுபிடிக்கப்படும் புதிய புதிய அறிவியல் ஆராய்ச்சிகளை 'யுனெஸ்கோ கூரியர்' இதழ் உடனுக்குடன் உலக்குக்கு வழங்குகிறது. முப்பது உலக மொழிகளில் வெளிவரும்