பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/177

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மு. அறிவானந்தம்

169
4. மருத்துவக் கலைச் சொல் களஞ்சியம் (முதல் பாகம்).

5. கணினி கலைச் சொல் களஞ்சியம்.

ஆகிய ஐந்து நூல்களாகும்.

தொடக்கமாக வெளியிட்ட முதல் இரண்டு நூல்கள் சுமார் ஐம்பத்தி நான்கு அறிவியல், தொழில் நுட்பப் பிரிவுகட்கான கலைச் சொற்களையும் பொருட்விளக்கத்தையும் கொண்டு அமைந்துள்ளன. ஆனால் இவைகளில் படங்கள் ஏதும் இடம் பெறாதது இவருக்குப் பெரும் குறையாக இருந்திருக்க வேண்டும். எனவேதான் அவர் அடுத்து வெளியிட்ட கலைச் சொல் களஞ்சிய அகராதியில் முந்தைய இரு நூல்களின் சொற்கள், சொல் விளக்கங்கள், பொருள் விளக்கங்களைக் குறைத்தும் கூட்டியும் மாற்றியும் திருத்தியும் அமைத்தார். மேலும், நூலை விரிவுபடுத்தியதோடு ஏராளமான எண்ணிக்கையில் படங்களையும் இணைத்து பெருநூலாக வெளியிட்டார். நூலை விரிவுபடுத்தியது போலவே அதன் தலைப்பையும் விரிவுபடுத்தி, 'மருத்துவ அறிவியல் தொழில் நுட்பக் கலைச் சொல் களஞ்சிய அகராதி' என அமைத்தார்.

தன் முதல் கலைச் சொல் களஞ்சிய நூலின் முன்னுரையிலேயே தான் எந்த நோக்கத்தில் எதிர்பார்ப்புடன் இந்நூல் எழுதி வெளியிடப்பட்டுள்ளது என்பதை விளக்கும் போது,

"சாதாரண கலைச் சொல் அகராதிகளினின்று இஃது சற்று வேறுபட்டது. ஆங்கிலச் சொற்களுக்குநேரான தமிழ்க் கலைச் சொற்களைக் கொடுப்பதைவிட அச்சொல்லின் செயற்பாட்டு வினை சற்று விரிவாக <span title="விளக்கப்பட்டுள்ளளது.">விளக்கப்பட்டுள்ள