பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

மொழி பெயர்ப்பும் மணவையார்


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற போது அறிவியல் மூலமாக பிற துறை சார்ந்த தகவல்களைத் தமிழில் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை அவருக்கு எப்போதும் இருந்து வந்துள்ளது. அதிலும், வேகமாக வளர்ச்சி பெற்றுவரும், அறிவியலைத் தமிழில் தருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தாரென்றே சொல்லவேண்டும். ஆங்கில நூல்களைப் படிக்கும்போது, அவற்றைத் தமிழில் பெயர்த்துச் சொல்லிப் பார்ப்பது அவர் வழக்கம். சில சமயம் தமிழில் எழுதிப் பார்ப்பதுமுண்டு. இவற்றால் மொழிபெயர்ப்புத் திறமை இவர் அறியாமலேயே இவருள் கனிந்து கொண்டிருந்தது.

மலையாள மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பதற்கும் ஆங்கில மொழியிலிருந்து தமிழில் பெயர்ப்ப தற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதை நன்கு உணர்ந்து தெளிந்திருந்தார். இதற்கு மொழியமைப்பு வேறுபாடுகள் மட்டுமல்லாது பொருள் வாரியாக வேறுபாடுகள் இருப்பதையும் நன்கு அறிந்தேயிருந்தார். இந்தப் பட்டறிவுதான் அவர் பணியில் சேர பேருதவியாயமைந்தது எனலாம்.

இவர் தென்மொழிகள் புத்தக நிறுவனம் பதிப்பாசிரியர் பணியில் சேர நேர் காணலுக்குச் சென்றார். சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஏ. இலட்சுமணசாமி முதலியார், வேங்கடேசுவர பல்கலைக் கழகத் துணைவேந்தர் திரு. கோவிந்தராஜுலு, டிரஸ்ட் பொது மேலாளர் திரு. சுந்தாராஜ் நாயுடு, செயலாளர் திரு. சேஷாத்திரி, குழந்தைக் கவிஞர் திரு. அழ. வள்ளியப்பா ஆகியோர் அமர்ந்திருக்க நேர்காணல் நடைபெற்றது.

நேர் காணலின்போது டிரஸ்ட் பொது மேலாளர் திரு. சுந்தரராஜு நாயுடு "Bread for early days" என்ற ஆங்கிலத் தலைப்புக்கேற்ற தமிழ்த் தலைப்பை தருமாறு வேண்டி