பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமுதன

179


திட்டத்தை மணவையார் தந்தார். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த டிரஸ்ட், இத்திட்டத்தை ஏற்றுச் செயல்படுத்தியது. மூன்றுமாத மொழி பெயர்ப்பு பயிற்சி வகுப்புத் திட்டத் தலைவராக திரு.பெ.ந. அப்புசாமி நியமிக்கப்பட்டார். தமிழுக்குப் பொறுப்பாளராகப் பன்மொழிப் புலவர் கா. அப்பா துரையாரும் அவருக்குத் துணைவராக மணவையாரும் நியமிக்கப்பட்டனர். ஒரு மணி நேரக் கருத்தரங்கும் ஒரு மணி நேரம் பயிற்சி வகுப்புமாக மூன்று மாத காலம் நாள்தோறும் மாலை நேரத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்களில் நானும் ஒருவன். மொழி பெயர்ப்புச் சிக்கல்களைத் திறம் பட விவரித்து, அவற்றிற்கான தீர்வுகளைச் சொல்லி சிறந்த மொழி பெயர்ப்பு எவ்வாறு அமையலாம் என்பதை மணவையார் விவரிப்பதே சுவையாக இருக்கும். பன்மொழிப் புலவர் க. அப்பாதுரையார் பங்களிப்பும் மறக்க முடியாததாகும்.

மொழிக்கும் முந்தையது மொழிபெயர்ப்பு எனக் கூறும் மணவையார் குழந்தைப் பருவம் முதலே மொழி பெயர்ப்புத் தொடங்குகிறது என்கிறார்.

"நுணுக்கமாக நோக்கும்போது மொழி பெயர்ப்பானது உணர்வு பெயர்ப்பு, கருத்துப் பெயர்ப்பு என்ற வகையில் மழலைப் பருவம் முதற்கொண்டே தொடங்கிவிடுகிறதெனலாம்"என்பது அவர் கருத்து.

அது மட்டுமல்ல, மொழி பெயர்ப்பு என்பது பிற மொழிகளிலிருந்து தமிழில் பெயர்ப்பது மட்டுமல்ல; வழக்கொழிந்த சங்ககாலத் தமிழை இக்கால மொழிக்கு மாற்றுவதும் ஒருவகை மொழி மாற்றப் பெயர்ப்புத்தான் என்கிறார். சங்க காலத் தமிழையும் இக்காலத் தமிழாக்கும் இம்மொழிமாற்றப் பணிபற்றி,