182
மொழி பெயா்ப்புப் பணியில் மணவையார்
10. திரைப்படச் சாரப் பெயர்ப்பு
(Sub-title Translation)
11. கருவி மொழி பெயர்ப்பு
(Machine Translation)
எனப் பன்னிரண்டு வகைகளாகப் பிரித்துக் கொண்டு, அவ்வத்துறை அல்லது பொருள்பற்றிய மொழி பெயர்ப்பை எம்முறையில் செய்வது என்பதையெல்லாம் 'மொழி பெயர்ப்பும் ஒலி பெயர்ப்பும்' என்ற நூலிலும் 'காலம் தேடும் தமிழ்’ என்ற நூலிலும் பல்வேறு எடுத்துக் காட்டுகளுடன் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். இவ்விரு நூல்களும் மொழிபெயர்ப்புத் துறையினர்க்கு வேதப் புத்தகங்களைப் போல் விளங்கி வழிகாட்டி வருகின்றன.
இஃதன்னியில் ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு இன்றியமையாது தேவைப்படும் தகுதிப்பாடுகள் என்னென்ன என்பதையும் இவரளவுக்குத் தெளிவாகக் கூறி விளக்கியவர்கள் யாரும் இல்லை எனத் துணிந்து கூறலாம்.
முழுக்க முழுக்க மொழிபெயர்ப்பு இதழாக வெளிவந்து கொண்டிருக்கும் "யுனெஸ்கோ கூரியர்" சர்வதேசத் தமிழ்த் திங்களிதழ், இவரது மொழிபெயர்ப்பு முறைகளை அடியொற்றியே பெயர்க்கப்படுவதால் மூலச் செய்தி சிதைவேதும் இன்றி, மூலமாகத் தமிழில் எழுதப்பட்டவை போன்ற தோற்றத்தை வாசகர்களிடையே வழங்கி வருகிறது. 'யுனெஸ்கோ கூரியர்' 30 உலக மொழி இதழ்களில் நான்காவது இடத்தைப் பெற்றதற்கான அடிப்படைக் காரணங்களில் இம்மொழிபெயர்ப்பு உத்தியும் ஒரு காரணமாகும்.
ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளனின் மொழிபெயர்ப்புச் செயற்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்