அமுதன்
183
என்பதைப் பற்றி மணவையார் குறிப்பிடுவதைப் பார்ப்போம்.
"மொழி பெயர்ப்பில் மூல ஆசிரியனின் கருத்துக்கும் உணர்ச்சிக்கும் இடமிருக்க வேண்டுமே தவிர நமக்கேற்படும் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் எழும் கருத்துகளுக்கோ உணர்ச்சிகளுக்கோ சிறிதும் இடமிருத்தல் கூடாது. சுருங்கச் சொன்னால் கூடுவிட்டுக் கூடு பாய்வது போல் மூல நூலாசிரியன் வாசகர்களோடு உறவாட வேண்டுமே தவிர, நாம் மூல ஆசிரியன் வாயிலாக வெளிப்பட எக்காரணம் கொண்டும் முயல்தல் கூடாது.
தொடர்ந்து விவரிக்கும்போது,
"இன்னும் நுட்பமாகக் கூறுமிடத்து மொழி பெயர்ப்பில் மூல நூலாசிரியன் கொண்டிருக்கும் மனப்பான்மை, மொழித்திறம், நடைச் சிறப்பு, கருத்து வளம், சொல்லும் உத்தி ஆகியவற்றைச் சிறிதும் பிறழாமல் அப்படியே உள்ளது உள்ளவாறே பிரதிபலிக்க முயலவேண்டுமே தவிர, மாறுபட்ட முறையில் தனது மொழிப் புலமை, நடைத் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்த விழையும் முறையில் முக்கியத்துவம் பெற முயல்வது விரும்பத்தக்கதல்ல".
இவர் இதுவரை ஆங்கிலத்திலிருந்தும் மலையாள மொழியிலிருந்தும் பத்துக்கு மேற்பட்ட நூல்களை மொழி பெயர்ப்பு செய்துள்ளார். நூறுக்கு மேற்பட்ட பல்பொருள் மொழிபெயர்ப்பு நூல்களை செப்பம் செய்து அச்சிட்டுள்ளார். சர்வதேச மொழி பெயர்ப்பு மாத ஏடான 'யுனெஸ்கோ கூரியர்' இதழை கடந்த 32 ஆண்டுகளாக நிர்வாக ஆசிரியர் பொறுப்பேற்று செயல்பட்டு வருவதன் மூலம் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை மொழிபெயர்த்தும் ஆயிரக்கணக்கான கட்டுரைகளைச் செப்பம் செய்தும்