184
மொழி பெயர்ப்புப் பணியில் மணவையார்
மொழிபெயர்ப்பு அனுபவ நிறைகுடமாக விளங்கி வருகிறார்.
தான் பெற்ற அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் மொழிபெயர்ப்புத்துறையைக் கட்டுக்கோப்பான கொள்கை, கோட்பாடு, விதி முறைகளோடு வளர்க்கவும் தனித்த முறையில் தன்சொந்தச் செலவில் மறைந்த தமிழ்நாடு அரசு கல்வித்துறைச் செயலாளர் திரு.கா. திரவியம் தலைமையில் முழுநாள் மொழி பெயர்ப்புக் கருத்தரங்கை சென்னையில் நடத்தினார். காலை முதல் மாலை வரை நடைபெற்ற இக்கருத்தரங்கில் மொழி பெயர்ப்புப் பட்டறிவுமிக்க பன்னிரண்டு வல்லுநர்கள் கலந்து கொண்டு கருத்துகளை வழங்கி பிரச்சினைகளை அலசி ஆராய்ந்தனர். மொழிபெயர்ப்புச் சிக்கல்களைத் தக்கவர்களைக் கொண்டு ஆய்ந்த முதல் தொழில் நுட்பக் கருத்தரங்கு என்ற சிறப்பும் இதற்கு உண்டு. இதற்கு முழுக்காரணமாக அமைந்தவர் மணவையாரே ஆவார்.
இவர் ஆங்கிலத்திலிருந்தும் மலையாளத்திலிருந்தும் மொழிபெயர்த்த நூல்களில் குழந்தை இலக்கிய நூல்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளன. அவற்றை அவர், குழந்தைக்குரிய சொல்லாட்சித் திறன் எவ்வளது என்பதை நுணுகி உணர்ந்து தெளிந்து, அவர்களின் புரிந்துணர்வுக் கேட்ப, நான்கைந்து சொற்களைக் கொண்ட இனிய, எளிய நடையில், பெயர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதே போன்று 'புதிய கண்டுபிடிப்புகளின் வரலாறு' போன்ற அறிவியல் நூல்களையும் இவர் வகுத்துள்ள மொழி பெயர்ப்பு முறைகளைப் பின்பற்றி கருத்துச் சிதைவு சிறிதுமின்றி சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். அவற்றைப் படிக்கும்போது மொழிபெயர்ப்பு என்ற உணர்ச்சியே எழாது, மூலமாக தமிழில் எழுதப்பட்டவை போன்ற உணர்வே