அமுதன்
185
அழுத்தமாக ஏற்படுகிறது. அந்த அளவுக்கு இவரது மொழி பெயர்ப்பு ஆற்றல் மிக்கதாக அமைந்துள்ளது.
இவர் மலையாள மொழியில் பெயர்த்த சாகித்திய அகடாமிப் பரிசு பெற்ற எம்.டி வாசுதேவ நாயரின் 'காலம்’ என்ற புதினத்தின் மொழிபெயர்ப்பை 'மொழியாக்கம்’ (Transcreation) என்ற மொழி பெயர்ப்பு உத்தியைக் கையாண்டு பெயர்த்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இவ்வகை மொழிபெயர்ப்பு முறை மூலத்தின் தன்மையைச் சிறிதும் பாதிக்காது, மூல மொழி படைப்பிற்கு மேலும் மெருகூட்டும் முறையில், எந்த மொழியில் பெயர்க்கப்படுகிறதோ அந்த மொழியின் இயல்பிற்கேற்ப சுவையோடு பெயர்க்கப்படுவதாகும். இத்தகைய படைப்பிலக்கிய மொழி பெயர்ப்பைப் படிப்போர் மொழிபெயர்ப்பு என்ற உணர்வையே பெறமாட்டார்கள். எனவே, 'காலம்' புதின மொழிபெயர்ப்பை 'இந்து' ஆங்கில நாளிழதழில் விமர்சனம் செய்த விமர்சகர் ஆர்.ஏ. பத்மநாபன் அவர்கள் "மலையாள மொழியினின்றும் தமிழில் பெயர்க்கப்பட்ட 'காலம்' என்ற புதினம், தமிழில் எழுதப்பட்ட மூலநூல்போலவே அமைந்துள்ளது. மொழிபெயர்ப்பு என்ற உணர்வே படிப்போர்க்கு உண்டாகதவாறு மணவை முஸ்தபா திறம்பட மொழியாக்கம் செய்துள்ளார். ஒரு படைப்பிலக்கியம் எவ்வகையில் வெற்றிகரமாக மொழிபெயர்ப்பது என்பதற்கு இந்த மொழிபெயர்ப்பு நூலே தக்க சான்றாகும்" எனக் குறிப்பிட்டு மதிப்புரைத்துள்ளது. மணவையாரின் மொழிபெயர்ப்பு உத்திக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
மணவை முஸ்தபா இதுவரை மொழிபெயர்ப்புத் துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு உத்திகளை வகுத்துக் காட்டியிருப்பதோடு, அவைகளை தானே செயல்படுத்தி