இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
186
மொழி பெயர்ப்புப் பணியில் மணவையார்
வெற்றி கண்டு வழிகாட்டிக் கொண்டு வருகிறார். மொழி பெயர்ப்பை ஒரு ஆற்றல் மிக்க அருங்கலையாக, இக்கால மொழித் துறைகளில் தவிர்க்கவியலா தனித் துறையாக வளர்த்து வரும் பான்மையைப் பாராட்டி ஊக்குவிக்கும் முறையில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை 1994ஆம் ஆண்டில் சிறந்த மொழிபெயர்ப்பாளர்க்கான விருதளித்துப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு அறிவியல் தமிழின் பெருங் கூறாக அமைந்துள்ள மொழிபெயர்ப்புக் கலையை, ஆற்றல் மிக்கத் தனித் துறையாக வளர்த்தெடுப்பதில் கடந்த நாற்பதாண்டுகளாக பெரு முயற்சி மேற்கொண்டு உழைத்து வரும் மணவையாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
★