பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/196

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

தமிழ் வளா்ச்சியில் "கூரியர்" பங்கு
தமிழில் 'கூரியர்' இதழ் வெளிவந்தது ஒரு சுவையான நிகழ்ச்சி. பலதுறை சார்ந்த நூல்களையும், உலக இதழ்களையும் படிப்பதில் பேரார்வம் கொண்டிருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆங்கிலக் 'கூரியர்' இதழினை வழக்கமாக விரும்பிப் படிப்பவர். பல்வேறு நாடுகளையும், அவற்றின் சமூக, பண்பாட்டுச் சிக்கல்களையும், அன்றாட அறிவியல் முன்னேற்றங்களையும் உலக மக்களுக்கு வழங்கி வரும் "கூரியர்" இதழ் தமிழ்ப்பதிப்பாகவும் வெளிவந்தால் அவற்றை விரிவான கண்ணோட்டத்தில் தமிழக மக்கள் நன்கு புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படும் என்று அவர் எண்ணினார். அவர் தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்ற பின்னர், அப்போது யுனெஸ்கோவின் துணைத் தலைமை இயக்குநராகப் பணியாற்றிவந்த நம் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் மால்கம் எஸ்.ஆதிசேஷையா அவர்கள் முதல்வர் அண்ணாவைச் சந்தித்தபோது "கூரியர்" இதழை தமிழில் வெளியிடவேண்டும் என்ற தமது விருப்பத்தை வலியுறுத்தினார். டாக்டர் ஆதிசேஷையாவும் ஆவன செய்வதாக உறுதியளித்தார். இது குறித்து தமிழக அரசுடன் நேரடியாக யுனெஸ்தோ பேச்சு நடந்த முடியாத நிலையிலும், இந்திய அரசுடன் அவர் பேச்சு நடத்த வேண்டியிருந்தது. அரசின் ஆட்சிமொழியான இந்திக்குக் கிடைக்காத வாய்ப்புத் தமிழுக்குக் கிடைப்பதா என்று மைய அரசு எண்ணியது. "கூரியர்" இதழை இந்திமொழியிலும் வெளியிடுவதாக இருந்தால் தமிழ்ப்பதிப்புக்கு அனுமதி அளிப்பதாக இந்திய அரசு நிபந்தனை விதித்தது. எனவே தமிழ், இந்தி ஆகிய இருமொழிப்பதிப்புகளுக்காகவும் யுனெஸ்கோவுடன் அவர் வாதாட வேண்டியதாயிற்று. இறுதியில், இரு மொழிகளிலும் "கூரியர்" இதழைக் கொண்டுவர யுனெஸ்கோவின் அனுமதியைப் பெற்றார். இவ்வாறு யுனெஸ்கோவின் நிதியுதவி, இந்திய அரசின் நிதியுதவி, ஓரளவு தமிழக அரசின்