உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரா. நடராசன்

189


மானியம் இவற்றுடன் "கூரியர்" தமிழ்ப்பதிப்பு 1967 ஜூலை முதல் வெளிவரலாயிற்று. இந்தி மொழிப்பதிப்பு 1968 இல்தான் வெளிவரத்தொடங்கியது. தமிழ்க் "கூரியர்" இதழின் ஆசிரியராக திரு. மணவை முஸ்தபா தொடக்கம் முதல் இன்று வரைப் பணியாற்றி வருகிறார். தமிழ்ப்பதிப்பினை அமைப்பு, அச்சு, உள்ளடக்கநேர்த்தி எல்லாவற்றுடனும் குறித்த காலக்கெடுவுக்குள் கொண்டு வந்து, தமிழ்ப் பதிப்புக்கு உலக அரங்கில் நான்காவது இடத்தைப் பெற்றுத் தந்த பெருமையும் மணவையாரையே சாரும்.

இந்திய அரசின் இந்தி மொழி இயக்ககத்தின் பெருமளவு நிதியுதவியுடனும், பணியாளர்கள் பலத்துடனும் வெளி வந்த இந்திமொழிப்பதிப்பு இன்றளவும் சிறப்பான முறையில் வெளிவரவில்லை. அதன் ஆசிரியர்கள் எத்தனையோ பேர் மாறிவிட்டார்கள். காலக்கெடுவுக்குள் வராமலும், இடையிடையே நின்று போயும் வெளிவந்து கொண்டிருந்த இந்திமொழிப் பதிப்பு கடந்த ஈராண்டுகளாக வெளிவருவதாகத் தெரியவில்லை.

ஆனால், அதே சமயத்தில் கடந்த 32 ஆண்டுகளாக, தனியொருவராக இச் சர்வதேசத் திங்களிதழைத் திறம்பட நடத்தி வருகிறார் மணவையார். இது இவருடைய ஆளுமையைக் காட்டுகின்றது.

இந்தி மொழிப்பதிப்பு சரிவர வெளிவராத நிலையில், தமிழ்ப்பதிப்பு உயர்தரத்துடன் தொய்வின்றி வெளிவருவதைக் கண்டு மனம்பொறாதவர்கள். தமிழ்ப் பதிப்பினை நிறுத்தி விடும் முயற்சியை தில்லியில் மேற்கொண்ட போது, இதன் நிர்வாக ஆசிரியர் மணவை முஸ்தபாவின் சாதுரியமான நடவடிக்கையின் விளைவாக, அவரின் வேண்டுக்கோளுக்கிணங்க அப்போதைய நாடாளுமன்ற (மக்களவை) உறுப்பினர் டாக்டர். கலாநிதி அவர்கள்