பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

தமிழ் வளர்சசியில் கூரியர் பங்கு



மூளை என்றால் என்ன?

"மூளை மனிதனின் சிந்தனைக்கும் செயலுக்கும், உணர்ச்சிக்கும் ஊற்றுக்கண். மண்டையோட்டுக் கவசத்திற்குள் பல சவ்வுப் படலங்களின் உறையினுள், அதிர்ச்சி தாங்கும் திரவ மெல்லணையின் பாதுகாப்பில் பொதிந்திருக்கும் மூளை, பல அடுக்கு மடிப்புகளைக் கொண்டது. சிறு முலாம்பழத்தின் அளவே அமைந்த இதன் எடை 1360 கிராம். குறுகிய இடத்தினுள் ஒடுங்கிக் கிடக்கும் மூளையில் 1000 கோடி நியூரான்கள் அடங்கியுள்ளன. மூளை இயக்க அலகுகள், நுண்ணிய நரம்பு உயிரணுக்களாலானவை. இந்த மூளை கோடிக்கணக்கான தனிச்சுற்றோட்டங்களைக்கொண்டது. இச் சுற்றோட்டம் ஒவ்வொன்றும் அதனதன் தனி அலுவலைச் செய்கிறது."

(1982 ஏப்ரல் இதழ்)

அறிவியலை அழகிய, இனிய, எளிய, இலக்கியத் தமிழில் கூற இயலும் என்பதைக் 'கூரியர்' இவ்வாறு மெய்ப்பித்துவருகிறது. "வால் நட்சத்திரம்" என்றால் என்ன? இது எவ்வாறு தோன்றுகிறது? இதற்கு ஓர் எளிய விளக்கம்:

"சுற்றிவரும் ஒரு விண்மீன் அவ்வப்போது "ஊர்ட்” மேகத்தின் வழியே ஈர்ப்பாற்றலுடைய அதிர்வு அலையை அனுப்புகிறது. இந்த அதிர்வலையின் காரணமாக. இந்த மாசுற்ற பனித்திரள்கள் சிதறுண்டு, விண்வெளியில் சில குறுகிய கால வால்விண்மீன்களாக உருமாறுகின்றன. இவை சூரிய மண்டலத்தை நோக்கி நீள் வடிவம் பெறுகின்றன. இத்தகைய குறுகிய கால விண்மீன்களில் ஒன்றுதான் ஹேலி விண்மீன்"

(1986 மே இதழ்)

புதிய சொற்கள்

தமிழில் புதிய சொற்களை எளிதாகப் புனைய முடியும் என்பதையும் "கூரியர்" தமிழ் இதழ் உணர்த்திவரு