பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/207

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

199

களுக்கு நன்கு தெரியும். அவர்சார்ந்த இஸ்லாமிய மதவியலில் அவர் சிறந்த ஓர் ஆய்வறிஞராகத் திகழ்கின்றவர் எனினும், அவர் சிந்தனை, பேச்சு, எழுத்து, செயல் அனைத்தும் தமிழ் வளர்ச்சியை அதுவும் அறிவியல் தமிழை வளர்த்தெடுப்பது பற்றியே சுற்றிச்சுழன்று கொண்டிருப்பதை அவரை நெருங்கி பார்ப்பவர் நன்கு விளங்கிக் கொண்டிருக்க முடியும். அறிவியல் தமிழுக்காக அவர் ஆற்றிய, ஆற்றி வருகின்ற பணிகள் அளவிறந்தனவாகும்.

இவரின் தமிழ்த்தொண்டுக்கு ஒரு சான்றாக, 'யுனெஸ்கோ கூரியர்' என்னும் தமிழ்ப் பதிப்பு இதழிகையின் ஆசிரியர் பொறுப்பில் நீண்டகாலமாகப் பணியாற்றி வருவதைக் குறிப்பிட்டே ஆகல் வேண்டும். இவ்விதழின் கண் இவர் கண்டுபிடித்துப் பயன்படுத்திய தூயதமிழ்ச் சொற்களும், அறிவியல், தொழிலியல், நுண்தொழிலியல், வரலாற்றியல், பொருளியல், குமுகவியல் மொழிபெயர்ப்புக் கலைச் சொற்களும் தமிழியல் வளர்ச்சிக்கும் தூய தமிழ் ஆக்கத்திற்கும் உரம் சேர்ப்பவை.

கடந்த 46 ஆண்டுகளாக 33 உலக மொழிகளில் வெளிவந்து கொண்டிருக்கும் இவ்விதழின் தமிழ்ப்பதிப்பு ஆசிரியராகக் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து ஆசிரியப் பணியாற்றி வருபவர் இவர் ஒருவர் மட்டுமே என்பது தமிழ்மொழிக்கும் இனத்துக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதாகும்.

உலக மொழி இதழ்களில் தமிழ்ப்பதிப்பிற்கு நான்காவது இடத்தைப் பெற்றுத்தந்த பெருமைக்குரியவர்.இவர். 1967ஆம் ஆண்டு 'யுனெஸ்கோ கூரியர்' தமிழ்ப் பதிப்பு வெளிவரத் தொடங்கியது. அது தொடங்கிய பத்து ஆண்டுகளுக்குள் அதன் மொழித்திறன், அழகிய வடிவமைப்பு, அச்சுமுறை ஆகியவற்றிற்காக அது நான்காம் இடத்தைப் பெற்று, அந்நிலையை இன்றுவரைதக்கவைத்துக் கொண்டுள்ளதற்கு,