பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

தொகுப்புரை


அடிப்படையில் கட்டுரைகளைத் தீட்டி வழங்கினர். அக்கட்டுரைகளின் தொகுப்புத்தான் இப்போது உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்நூல்.

எனினும், இது மணவையாரைப் பற்றி முழுமையான ஆய்வு நூலன்று. அவரது அறிவியல் தமிழ் வளர்ச்சி முயற்சிகளையும், சிந்தனைகளையும் கோடிட்டுக் காட்டும் முயற்சி மட்டுமேயாகும். ஆய்வாளர்கள் ராம்குமார், மீரா, டாக்டர் இராதா செல்லப்பன், மு. அறிவானந்தம், அமுதன் ஆகியோரின் ஆய்வுக்கட்டுரைகள் இதனை வெகு சிறப்பாக வெளிப்படுத்துகின்றன.

கடந்த கால் நூற்றாண்டு காலமாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பணியையும் மணவையார் செவ்வையாக செய்து வந்துள்ளார். இஸ்லாமிய சமுதாயச் சிறைக்குள் சிக்கிக் கிடந்த இஸ்லாமிய இலக்கியங்களை மற்ற சமயத்தவர் மத்தியில் கொண்டு வந்து ஆய்வுப் பொருளாக்கிய பெருமை மணவையாரையே சாரும். சீறாப்புராண கருத்த ரங்காகட்டும், சூஃபிமார்கள் உருவாக்கிய இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியக் கருத்தரங்காகட்டும் அனைத்துச் சமயத்தவர்களையும் கொண்டு ஆய்வு செய்வித்த பெருமை மணவையாரையே சாரும். தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள் போன்ற ஆய்வு நூல்கள் மூலம் இஸ்லாமியப் புலவர்கள் தமிழுக்கு வழங்கிய தன்னிகரற்ற பங்களிப்பை ஆதாரபூர்வமாக வழங்கிச் சிறப்பித்த ஆய்வுகள் ஆகும். இவைகளைப் பற்றி திருச்சி சீதாலட்சுமி இராமசாமி கல்லூரிப் பேராசிரியை டாக்டர் பானு நூர்மைதீனின் 'மணவையாரின் இஸ்லாமிய இலக்கியப்பணி' என்ற ஆய்வுக் கட்டுரை மிகச் சிறப்பாக இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சிக்கு மணவையாரின் பங்களிப்பை விளக்குகிறது.

இன்றைய சமுதாய ஒற்றுமைக்கும் சமய நல்லிணக்கத்துக்கும் மணவையார் இலக்கியம்வழி மேற்கொண்ட முயற்சிகளையும் சமய ஆய்வாளர் என்ற அடிப்படையில்