பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆ. ராமசாமி

21


வந்தார். மற்றவர்களுக்கு நெடுஞ்சாலையாக இருந்தது. ஆனால், மணவையாருக்கு அதுநெடும் வாசக சாலையாக அமைந்தது. அந்த சாலைக்குத்தான் அண்மையில் மணவை முஸ்தபா நெடுஞ்சாலை என்று மணப்பாறை நகராட்சியினர் அச்சாலைக்குப் பெயரிட்டு மகிழ்ந்துள்ளனர். மணப்பாறை உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதும், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் 'இன்டர்மீடியட்' படிக்கும் போதும் மாவட்ட, மாநில அளவிலான பல போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசுகளைப் பெற்று வந்தார். போட்டிகளில் வெற்றி பெற்று ஏராளமான நூல்களைப் படித்துத் தன்னை தயார்படுத்திக் கொண்டார்.

அண்ணாமலை அனுபவம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது அங்குள்ள நூலகத்தினை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டதுடன் தமிழ் மொழிப் புலமை, இலக்கிய வேட்கை, தமிழ் உணர்வு, பகுத்தறிவு ஆகியவைகளை வளர்த்துக் கொண்டார். அங்கே தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் மணவையாரைத் தன் சிறப்பு அணுக்க மாணவராக ஏற்றுத் தடுத்தாட் கொண்டார். வாக்குவாத முறையில் அவருடன் நீண்ட நேரம் வாதமிட்டுத் தன் தமிழறிவை மேம்படுத்திக் கொண்டார். பட்டிமன்றத்தில் வாதங்களை இவர் அடுக்கி வைக்கும் முறையைப் பார்த்து 'நச்சினார்க்கினியர்' என்று தெ.பொ.மீ. அவர்கள் பெருமையாக அழைத்ததுடன் இறுதிவரை மணவை முஸ்தபாவைப் பார்க்கும் போதெல்லாம் 'நச்சினர்க்கினியர்' என்றே அழைத்து வந்தார்.

தமிழறிஞர் மகா வித்துவான் ச. தண்டபாணி தேசிகர், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் போன்ற தமிழ்ப் பேரா