பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

அறிவியல் தமிழின் விடிவெள்ளி


சிரியர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மணவையாருக்கு தமிழ் இலக்கிய அறிவையும், தமிழ் உணர்வையும் ஊட்டி வளர்த்த பேராசிரியப் பெருமக்கள்.

அறிவியல் தமிழுக்காக வாழ்க்கை அர்ப்பணம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகப் படிப்பை முடித்தவுடன் சேலம் அரசினர் கலைக் கல்லூரியில் நல்ல சம்பளத்தில் ஆசிரியராகப் பணியாற்ற ஆணை வந்தது. கல்லூரி வேலையை ஏற்றுக் கொள்ளும் முன்பு அவரது பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரிடம் வாழ்த்துக்களைப் பெற சிதம்பரம் சென்றபோது, அங்கு நடைபெற்ற "பயிற்சி மொழி தமிழா? ஆங்கிலமா?" என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டார். தமிழில் அறிவியல் பாடங்களை நடத்துவதற்குக் கலைச் சொற்களின் பற்றாக்குறை பெரும் தடையாக உள்ளது" என்று பேசினார்கள்.

பேராசிரியர் இராமானுஜாச்சாரி என்பவர் "பயிற்சி மொழி என்பது எதிர்காலச் சந்ததிகளின் முன்னேற்றத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சி. அனைத்து அறிவியல் துறைகளும் ஆங்கிலத்திலேயே உள்ளது. எனவே, தமிழே பயிற்சி மொழி என்ற கானல் நீரை விட்டுவிட்டு, உண்மையைச் சிந்திக்க வேண்டும்" என்று பேசியபோது முஸ்தபா அவர்களின் உள்ளமும், உடலும் பற்றி எரிவது போலாயிற்று. உடலில் மின்சாரம் பாய்ந்தவர் போலாகி, மின்னல் வேகத்தில் ஒலிபெருக்கி முன்னே சென்று, "தமிழை வளப்படுத்துவோம் என்று சொல்லுங்கள். ஆனால், தமிழால் முடியாது என்று சொல்லாதீர்கள். வெறும் சொல்லினால் அல்லாது செயல் மூலம் தமிழால் முடியும் என்பதை நிரூபிப்பதே என் வாழ்வின் ஒரே இலட்சியம். அறிவியல் தமிழ்