பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

அறிவியல் தமிழின் விடிவெள்ளி


பாளனாக இருக்கும் வாய்ப்பைப் பெற்றவன் என்பது எனக்கு மனநிறைவு அளிப்பதாக உள்ளது. இன்னும் பல தொகுதிகளையும் அவர் எழுதவிருக்கின்றார் என்பது மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாகும்.

அறிவியல் தமிழின் விடிவெள்ளி

அறிவியல் தமிழுக்கு ஒரே இலக்குடன் அரும்பணி ஆற்றிவரும் மணவை முஸ்தபா அவர்களைத் தமிழ் உலகம் மனம் திறந்து பாராட்டக் கடமைப்பட்டுள்ளது. அவர் அறிவியல் தமிழின் விடிவெள்ளி; நாளும் தமிழ்ப்பணி ஆற்றி வரும் நற்றமிழ்த் தொண்டர் அறிவியல் தமிழின் அறங்காவலர் அறிவியல் தமிழ் முன்னோடி, தமிழ் வளர்ச்சிக்கு சரியானதொரு பாதையைக் கூறிய தகைமையாளர்; தமிழுக்குப் புத்திலக்கணம் காண விரும்பும் புதுமை விரும்பி, காலம் தேடிய தமிழர் மணவையாரின் பணி மேலும் தொடர்ந்து, வருங்காலத் தமிழ்ச் சமுதாயம் வளம் பலபெற உதவும் என்பது உறுதி.