பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27




தமிழ் வளர்ச்சியில்

மணவையார் செய்த புரட்சி!


மீரா


தமிழ்ப் பெயர்கள்

பள்ளியில் படிக்கும் பருவம் தொட்டே தமிழ் மொழி மீது தணியாப் பற்றுக் கொண்டவர் மணவையார். அதற்கேற்ப இளமையிலேயே தமிழை ஆழ்ந்து கற்றவர். தமிழ் இலக்கியத்தில் பெரும் ஈடுபாடு கொண்டு புலமையைச் செம்மையாய் வளர்த்துக் கொண்டவர். எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே தனது இயற்பெயரான 'முகமது முஸ்தபா' என்பதை 'இளமொழி' என மாற்றியமைத்துக் கொண்டவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கால் வைத்தவுடன் மணவை முஸ்தபாவின் தமிழ்ப் பற்றையும் தமிழ்ப் புலமையையும் அறிந்த பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் மணவையாரை 'நச்சினார்க்கினியர்' என்ற நற்றமிழ்ப் பெயரால் அழைத்து மகிழலானார். அப்பெயரே பல்கலைக் கழகத்தில் நிலைபெறலாயிற்று.

இனங்காண மூலப் பெயர்

பல்கலைக் கழகப் படிப்பை முடித்து பணியிலமர்ந்த போது பேரா. தெ.பொ. மீ. அவர்கள் மணவையாரிடம் "இனி, நீ உன் சொந்தப் பெயரில் நடமாடுவதையே நான்