உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

தமிழ் வளர்ச்சியில மணவையாா் செய்த புரட்சி


பேச்சுக்காவும் பல பரிசுகளைத் தவறாமல் பெற்று வந்ததற்கு இதுவே அடிப்படைக் காரணமெனலாம். தன் எழுத்து, பேச்சுப் போட்டிப் பரிசுகளின் வெற்றி ரகசியத்தைப் பற்றி மணவை முஸ்தபா கூறுவதைக் கேட்போம்:

"போட்டி என்று வந்துவிட்டால் எனக்கு அறை கூவலான தலைப்புகளே மிகவும் பிடிக்கும். சாதாரணமான எளிதான தலைப்புகளில் பலரும் எழுதுவார்கள்; பேசுவார்கள். இது இயல்பு. அதே தலைப்பில் நானும் எழுதினால், பேசினால் மற்றவர்கள் அரைத்த மாவையே நானும் அரைப்பதுபோல் அமைந்துவிடும். அதில், புதுமைக் கருத்துகள், புதிய சிந்தனைகள் இடம்பெற்றபோதிலும் அவை பரிசுக் கட்டுரையை அல்லது சிறந்த பேச்சாளனைத் தேர்ந்தெடுக்கும் நடுவர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறிவிடும். எவரும் எளிதாகப் பேச எடுக்கஞ்சும் கடினமான தலைப்பைத் தேர்ந்தெடுத்துப் போட்டிக் கட்டுரை வடித்தால் அல்லது பேசினால் அது கட்டுரை தேர்வு செய்யும் நடுவர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கவே செய்யும். ஏனெனில் கடினமான தலைப்புகளில் ஒருசில கட்டுரைகளே எழுதப்படும் அல்லது ஒருசிலர் மட்டுமே பேசுவர்.

"மேலும் போட்டி என்று வரும்போது நம்முடைய சிந்தனையின் தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டும். அதுவே நடுவர்களைப் பெரிதும் ஈர்த்து அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரும். அதற்காகவே எப்போதும் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் மிகக் கடினமான தலைப்புகளையே தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருந்து வருகிறேன்". எனத் தெளிவாகத் தன் மன உணர்வுகளை, கொள்கைகளை பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தெளிவுபடுத்தியுள்ளார். (காலம் தேடிய தமிழனின் அறிவியல் தமிழ் வரலாறு பக்கம் 80, 81).