உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

தமிழ் வளா்ச்சியில மணவையாா் செயத புரட்சி


என்பதற்கு இன்றைக்கு இணையற்ற எடுத்துக்காட்டாக விளங்குகிறார் வளர்தமிழ்ச் செல்வர் மணவை முஸ்தபா அவர்கள்.

வினாவுக்கு விடையாக

அறிவியல் துறைகளில் பட்டம் பெற்றவர்களே அறிவியல் தமிழ்ப் பணியாற்ற முடியும் என்ற கோட்பாடு நெடுங்காலமாக இருந்து வருகிறது. அறிவியல் கற்றவர்கள் தமிழ்க் கவிஞர்களாக, தமிழ்ப் படைப்பிலக்கிய ஆசிரியர்களாகத் திகழ்கின்றபோது, தமிழ் கற்றவர்கள் அறிவியல் தமிழ்ப் பணியாளர்களாக ஏன் ஆக முடியாது என்ற வினாவுக்குத் தக்க விடையாக இன்று திகழ்பவர் மணவையார் அவர்கள்.

தமிழ் இலக்கிய, இலக்கணம் கற்றவர்கள் தமிழ்க் கிணற்றைத் தாண்ட இயலாத கிணற்றுத் தவளைகள் என்ற அவப் பெயரைப் போக்கி, அவர்களாலும் பிற துறைகளை, குறிப்பாக அறிவியல் துறையைக் கற்று, அதில் தேர்ந்த வல்லுனராகிச் சிறக்க முடியும் என்ற புது நிலையை உருவாக்கியவர் மணவையார்.

கலைச் சொல் வள்ளல்

குறிப்பிட்ட பாடத்திட்ட அடிப்படையில் 'தேர்வுக்காக' மட்டும் ஓரிரு துறை அறிவியல் படித்து பட்டம் பெற்றவர்களைவிட அறிவு வளர்ச்சிக்காக என்று எவ்விதப் பாடத் திட்ட வரையறையும் இல்லாது அறிவியலின் அனைத்துப் பிரிவுகளையும் கற்று, இன்று அறிவியல் துறையின் அனைத்துப் பிரிவுகட்குமான கலைச் சொற்களை உருவாக்கி 'அறிவியல் கலைச் சொல் வள்ளல்' என்று போற்றப்படும் மணவை முஸ்தபா அவர்கள் அறிவியல் கலைச் சொல்