பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். வா.சா. பானு நூர்மைதீன்

41


ஊடாகத் தீர்வுகாணக் கலை வடிவம் தந்து, செம்மையாக செதுக்கித் தரும் கலைச் சிற்பி இவர்.

அமைதி இழந்தபோதும், அறியாமை படரும் போதும், அந்தகாரம் சூழும்போதும் பகலவன்போல் பெரியார்கள் பாருலகில் பிறந்திடுவர். அதுபோல் மறைந்துள்ள இஸ்லாமிய இலக்கியங்களைக் கல்வித் துறையில் துலக்கிக் காட்ட, உலகுக்கு ஒரு கலங்கரை விளக்கென ஒளிர மிளிர்ந்தவரே மணவையார்.

மணவை புகழ் மணக்க வைத்த மணித் தமிழர்

வெறும் கல்விச் சிந்தனை மட்டும் மனிதனை முழுமைப்படுத்தாது; ஆன்மீக அடிப்படையில் அறிவியலின் விந்தை கண்டு உரைத்தால் மட்டுமே கல்வியின் தேடல் முழுமை பெற்று முற்றுப் பெறுகிறது என உணர்ந்து, உரைத்து, அதனால் போற்றப்படுபவர். சிலருக்குத் தாம் பிறந்த ஊரால் பெருமை; இவரோ தன்னால் தமதுருக்குப் பெருமை தேடித்தந்த தகைமையாளர் 'மானுடம் என்றொரு வாளும், அதை வரத்தில் அடைந்திட்ட உன்னிரு தோளும் வானம் வசப்பட வைக்கும்' என்பதேபோல் வாழுகின்ற காலத்தே மானுடத்திற்கு, இஸ்லாமிய இலக்கியம் வழி பணியாற்றி அம்மானுடம் சிறக்க வழி செய்தவர்.

வள்ளலார் போல் சிந்தனை தோய்ந்த முகம்; ஞானச் சுடர் விழிப் பார்வை; அது தெறிக்கும் அறிவுத் தாகம்; மின்னலிடும் அலை மோதும் கண்கள்; அக் கண்ணிலே நல்ல குணம்; கட்டுறுதி உள்ள நெடிய உடலில் நேர்ந்த உழைப்பின் துடிப்பு. இதுவே அன்னாரின் தோற்றம். சுருங்கக் கூறின் 'கலை நலப்பட்டார் கடவுளே போல்வர்' என்பார். அதுபோல் தெய்வீக வடுப்பட்ட தோற்றமுடையவர்.