பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். வா.சா பானு நூாமைதீன்

43


V. மொழி பெயர்ப்பு l
10. (நூறு பேர்)

1. மூல நூல்கள்

1. தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள் (1986)

புலன் ஐந்து, பொறிஐந்து, பூதம் ஐந்து என்ற அடிப்படையேபோல் நம் வழிபாடும் ஐந்து. அதுமட்டும் அல்ல, நம் அகிலத்து ஆலமும் ஒன்று; ஆலயமும் ஒன்று, ஆரண வேதமும் ஒன்று, நம் ஆயுளும் ஒன்றெனக் கூறும் இஸ்லாத்தின் மேன்மை குறித்தும், அதில் வெளிப்படும் இலக்கிய முகங்களின் நன்கொடை குறித்தும் வெளிப்பட வேண்டி உருவாகிய ஆசிரியரின் நன் முயற்சியே இந்நூல்.

ஆசிரியர் பல துறையில் பங்கேற்பவர், பல சமயச் சான்றோருடன் மனந்திறந்து உரையாடுபவர்; எங்கு செல்லினும் எது செய்யினும் இஸ்லாத்திற்கும், இன்பத் தமிழுக்கும் எண்ணியும் எழுதியும், இயங்கியும், எடுத்து ரைத்தும் வருபவர். மேதை எம்.ஆர்.எம். அப்துல்-ரஹீம் அவர்களுடன் உரையாடுங்கால் - 'நம் முன்னோர் எழுதிக் குவித்துச் சென்றுள்ள இஸ்லாமிய இலக்கியங்களை எடுத்துச் சொல்லவோ, ஆராயவோ அதிகம் பேர் இல்லை. உம் போன்ற ஆர்வலர்களாவது இப்பணியில் ஈடுபட்டு, காலத்தின் இன்றியமையாத் தேவையான ஒரு நற்செயலைச் செய்து முடிக்கலாமே" என்று வேண்டியதன் விளைவாக இம்முயற்சி எடுத்ததாக, நூல் தோற்றத்தின் சீரிய காரணம் கூறுவார். இன்னும் பல காரணங்களும் இந்நூல் பிறக்க அடிப்படையாகின்றன.

அதேபோல் ஒய்.எம்.சி.ஏ. இலக்கியக் கூட்டமொன்றில் பேசி முடித்தபோது 'சாயபு நன்றாகத் தமிழ் பேசுகிறாரே என்ற ஒருவரின் பாராட்டு ஆசிரியருக்குப்