பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மணவையாரின இஸ்லாமிய இலக்கியப் பணி


இறைஞ்சும் பாடல் வகை; மஸ்அலா - நாமா - சரிதை - வரலாறு - இலக்கியம்; படைப்போர் போர்ச் செய்தி கூறும் இலக்கியம்; நொண்டி நாடகம் - தகாத முறையில் காலிழந்த நொண்டி மனந்திருத்தி அல்லாஹ்விடம் மன்றாடி மக்கமா நகர் சென்று மீண்டும் தன் கைகால் வரப் பாடுதல்; திருமண வாழ்த்து மணமக்களை வாழ்த்திப் பாடும் நூல். அரபுத் தமிழ் - இதன் பின்னணியோ சமயமும், தமிழுக்கும் பூத்த உணர்வுச் சங்கம இலக்கியம் எனலாம். தொடக்கக்கால முஸ்லிம்கள் சமய சூழலுக்காகத் தமிழ் மொழியை அரபு எழுத்துகளில் எழுதி அத்தகு நூல்களைப் போற்றிப் பாதுகாத்தனர். அந்த அரபுத் தமிழ் மரபுத் தமிழில் புகுத்தப்பட்டமையால் தமிழிலக்கியத்தில் அரபுச் சொற்கள் திசைச் சொற்களாக அமையும் பேற்றைப் பெற்றன; பல அரபுச் சொற்கள் தமிழில் கலந்தன. வேத மொழியாக இஸ்லாமியர்க்கு அரபு மொழியிருப்பினும், இன்பத் தமிழ் தமது தாய் மொழியாக அந்த மொழிக்கு அழகு சேர்த்த அரபுத் தமிழ் என்ற புதுவகையை உலகோர்க்குத் தம் நூல் மூலமாக அறிமுகப்படுத்திப் பெருமிதம் சேர்க்கிறார் மணவையார். இலக்கிய வடிவங்களின் கதைப் பகுதி விளக்கம், மேற்கோள் என விரவிய பாங்கும் அருமை.

நூலெங்கும் பல இலக்கியச் சான்றுகள். ஒன்று மட்டும் ஈண்டு காண்போம். நூறு மசலாவில் - வினா கேட்கிறாள் மெஹர்பான்; விடையிறுக்கின்றான் அப்பாஸ். வினாவாவது, மெஹர்பான் :

"தொல்புவியில் மரமொன்றுண்டு
அதைச் சூழ்ந்த கொப்பு பன்னீரதில்
நல்ல இலை முப்பதுண்டு அதில் நற்கறுப்பு

பாதி வெள்ளை

சொல்கின்ற பூ வைந்துண்டாம்
இதைச் சொல்லாவிட்டால் கொல்வேன் என்றாள்"